ஆளுமை:தாமரைச்செல்வி

From நூலகம்
Name தாமரைச்செல்வி
Birth
Place
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தாமரைச்செல்வி (1953.08.04) குமாரபுரம், பரந்தனில் பிறந்த எழுத்தாளர். பரந்தன் இந்து மகாவித்தியாலயத்திலும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றவர். தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கிறார்.

1973இல் எழுத ஆரம்பித்த இவரது படைப்புக்கள் முதலில் வானொலியிலும் 1974இலிருந்து இலங்கை, இந்திய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் வெளியாகின்றன. சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் எழுதிவருகிறார். சுமைகள் (நாவல்), தாகம் (நாவல்), வன்னியாச்சி (சிறுகதைகள்), பச்சைவயல்கனவு (நாவல்), அழுவதற்கு நேரமிலை (சிறுகதைகள்), ஒரு மழைக்கால இரவு (சிறுகதைகள்), வேள்வித்தீ (நாவல்), வீதியெல்லாம் தோரணங்கள் (குறுநாவல்), விண்ணில் அல்ல விடிவெள்ளி (நாவல்) போன்றவை இவரது நூல்கள்.