ஆளுமை:தர்ஜினி, சிவலிங்கம்

From நூலகம்
Name தர்ஜினி
Pages சிவலிங்கம்
Birth 1982.12.30
Pages -
Place யாழ்ப்பாணம்
Category விளையாட்டு வீராங்கனை

தர்ஜினி, சிவலிங்கம் (1982.12.30) யாழ்ப்பாணம், புன்னாலைக்கட்டுவனில் பிறந்துள்ளார். இவரது தந்தை சிவலிங்கம்; ஆரம்ப கல்வியை ஈவினை தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர் கல்வியை வசாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றுள்ளார். தர்ஜினி கிழக்கு பல்கலைக்கழத்தில் கலைமானி பட்டதாரியாவார். இலங்கையின் தேசிய வலைபந்தாட்ட அணியில் முக்கியமானதொரு வீராங்கனையாக இருக்கும் தர்ஜினி வங்கியாளராக கடமையாற்றகிறார். 6 அடி 10 அங்குலம் உயரத்தை கொண்டவர் தர்ஜினி சிவலிங்கம். இவர் தனது பாடசாலை பருவத்திலேயே வலைபந்தாட்டம் விளையாடி வருகிறார். 2009ஆம் ஆண்டு இலங்கைக்கு ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன் கிண்ணத்தை பெற்றக்கொடுக்கக் காரணமாக இருந்தார். தேசிய வலைப்பந்தாட்ட அணியின் துணைத் தலைவியாகவும் இருந்துள்ளார் தர்ஜினி. நான்கு தடவைகள் ஆசிய வலைப்பந்தாட்ட அணியின் சம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியுள்ளார். உலகிலேயே மிக உயரமான வலைபந்தாட்ட வீராங்கனையாகவும், கோல் போடும் (சூட்டர்) வீராங்கனையாகவும் தர்ஜினி சிவலிங்கம் விளங்குகிறார். அவுஸ்திரேலிய கழகங்களுக்கு இடையில் விளையாடிய ஒரே இலங்கைப் பெண் என்ற பெருமையையும் கொண்டவர் தர்ஜினி. தொடர்ந்து 12 வருடங்களாக இலங்கை அணியில் விளையாடி வருவதாக தெரிவிக்கிறார். மாணவர்களை சரியான வழியில் கொண்டு செல்ல ஒழுக்க சீலர்களாக வளரவும் விளையாட்டு மிக முக்கியமானதென குறிப்பிடும் இவர் எதிர்காலச் சந்ததியினருக்கு என வட மாகாணத்தில் ஒரு அக்கடமி ஒன்றை கட்ட வேண்டுமென வேண்டுகோளையும் முன் வைக்கிறார். விளையாட்டின் மூலமான நல்லதொரு எதிர்காலச் சந்ததியினரை உருவாக்கலாம் என்பது தர்ஜினி சிவலிங்கத்தின் கருத்தாகும்.

விருதுகள் 2011ஆம் ஆண்டு உலகின் சிறந்த வலைபந்தாட்ட Shooter 2009, 2012 ஆம் ஆண்டு உலகின் சிறந்த வலைபந்தாட்ட Shooter

வெளி இணைப்புக்கள்