"ஆளுமை:தங்கேஸ்வரி, கதிராமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Gopi, ஆளுமை:தங்கேஸ்வரி, கதிராமன். பக்கத்தை ஆளுமை:தங்கேஸ்வரி, கதிராமன் என்ற தலைப்புக்கு வழிமாற...)
 
வரிசை 21: வரிசை 21:
  
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:தங்கேஸ்வரி, க.]]
  
 
==வெளி இணைப்பு==
 
==வெளி இணைப்பு==

21:17, 14 டிசம்பர் 2020 இல் கடைசித் திருத்தம்

பெயர் தங்கேஸ்வரி
தந்தை கதிராமன்
தாய் திருமஞ்சனம்
பிறப்பு 1952.02.26
ஊர் மட்டக்களப்பு, கன்னங்குடா
வகை தொல்லியல் வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தங்கேஸ்வரி, கதிராமன் (1952.02.26 -) மட்டக்களப்பு, கன்னங்குடாவைச் சேர்ந்த தொல்லியல் வரலாற்று ஆய்வாளர், எழுத்தாளர். இவரது தந்தை கதிராமன்; தாய் திருமஞ்சனம். இவர் ஆரம்பக் கல்வியைக் கன்னங்குடா மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை மட்டக்களப்பு ஆனைப்பந்தி ஆர். கே. எம் மகளிர் உயர்தரப் பாடசாலையிலும் உயர்நிலைக் கல்வியை மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் கல்லூரியிலும் கற்றுக் கழனிப் பல்கலைக்கழகத்தின் பீ. ஏ. தொல்லியற் சிறப்புப் பட்டதாரியானார்.

இவர் கலாச்சார உத்தியோகத்தராகவும் 1992 – 1995 வரை கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைப் பகுதியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் பணியாற்றி 2004 ஏப்ரலில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.

இவர் கலைச்செல்வி, தமிழ்ச்செல்வி, சிவச்செல்வி ஆகிய புனைபெயர்களில் எழுதுவதுடன் இவரின் முதலாவது ஆக்கமான தீபாவளி வீரகேசரிப் பத்திரிகையில் 1972 ஆம் ஆண்டு பிரசுரமானது. இவர் ஆய்வுக் கட்டுரைகள், கலாச்சாரக் கட்டுரைகள், பாமர மக்களின் பரம்பரைக் கதைகள் போன்றவற்றைப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் எழுதி வருகின்றார். இவர் புராதன தொல்பொருள்களை வரலாற்று அடிப்படையில் ஆராய்வதுடன் விபுலானந்தர், தொல்லியல், குளக்கோட்டன் தரிசனம், மாகோன் வரலாறு, மட்டக்களப்பு கலைவளம் முதலான நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3051 பக்கங்கள் 41-49

வெளி இணைப்பு