ஆளுமை:ஜெலீல், எம்.ஐ.எம்.

From நூலகம்
Name முகம்மது ஜெலீல்
Pages முகம்மது இப்ராஹிம்
Pages பாத்தும்மா
Birth 1967.03.08
Place அக்கரைப்பற்று
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
Mimjaleel.jpg

முகம்மது ஜெலீல், முகம்மது இப்ராஹீம் (1967.03.08) அக்கரைப்பற்று மூன்றாம் குறிச்சியில் பிறந்தார், இவரது தந்தையின் பெயர் முகம்மது இப்ராஹிம் மற்றும் அவரது தாயின் பெயர் பாத்தும்மா ஆவார். இவரிற்கு மொத்தம் ஏழு சகோதரர்களாவர். இவர் எழுகவி ஜெலீல் என்று அழைக்கப்படுகிறார், தனது ஆரம்பக்கல்வியினை அக்கரைப்பற்று GMMS கல்லூரியிலும் 1978ஆம் ஆண்டு முதல் அக்கரைப்பற்று மத்திய கல்லூரியில் தனது இரண்டாம்நிலைக்கல்வியி னை தொடங்கினார். பாடசாலைக் காலம் தொட்டே இவர் நாட்டார் பாடல் கவிதை என்பவற்றில் ஈர்ப்புடையவாராகவும் நிகழ்வுகளில் பங்குபற்றக்கூடியவராகவும் காணப்பட்டார்.

தனது தொழிலாக ஆரம்பகாலத்தில் தச்சுத் தொழிலை நிரந்தரத் தொழிலாக செய்துவந்தார் பிற்காலத்தில் 2003 ஆம் ஆண்டிலிருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையில் பாதுகாப்பு உத்தியோகத்தராக நியமனம் பெற்று பணியாற்றி வருகின்றார். முன்னைய நாட்களில் ஊர்காவற்படையில் பயிற்சி பெற்று அணியினை தலைமை தாங்கி வந்த ஒரு முக்கிய ஆளுமையாவார். 1993 ஆம் ஆண்டு தமது பெற்றோரின் வேண்டுகோளிற்கிணங்க தனது தாய் மாமனின் மகளா முஹம்மது ஹனீபா ஜினூபா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

2014 ஆம் ஆண்டு தண்ணீருக்கு வந்த தாக்கம் எனும் தனது முதலாவது நூலினை வெளியிட்டார் தனது இரண்டாவது நூலான புழுதி மண்ணு எனும் நூலை 2016ஆம் ஆண்டு வெளியிட்டார். தொடர்ந்தும் கலைத்துறையில் பணியாற்றி வருகின்றார்