ஆளுமை:சோமசுந்தரம், சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:06, 13 அக்டோபர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (" {{ஆளுமை| பெயர்=சோமசுந்தரம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சோமசுந்தரம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1943.05.29
ஊர் கிளிநொச்சி
வகை இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


சோமசுந்தரம், சுப்பிரமணியம் அவர்கள் (1943.05.29 - ) இல் யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பகுதியை பிறப்பிடமாகக் கொண்ட இசைக் கலைஞர் ஆவார். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் வள்ளியம்மை. இவர் தன் ஆரம்ப கல்வியை நெடிந்தீவில் உள்ள இராமநாதன் வித்தியாலயத்திலும் பின்னர் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார்.

இவர் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான புராணங்கள் ஓதுவதற்கு கற்றுக் கொடுத்தார். பிரசங்கங்கள் மற்றும் கோயில் திருவிழாக்களில் இசைக்கச்சேரி செய்தார். இவரது கோயில் பிரசங்கங்களில் மக்கள் கலந்து கொண்டு செவிமடுப்பர்கள். காரனம் அவரது பிரசங்கம் கூறும் பாணி மற்றும் தத்துவ கதைகளை கூறி நகர்த்தி செல்லுவார். இவர் தனது 19 ஆவது வயதில் நெடுந்தீவு ஆலமாவனப் பிள்ளையார் ஆலயத்தில் திருவாதவூரடிகள் புராணத்திற்கு உரை சொல்வதில் பிரசங்கம் ஆரம்பித்தார். கிளிநொச்சி, வவுனியா போன்ற ஊர்களில் நூற்றுக்கணக்கான ஆலயங்களில் பிரசங்களை மேற்கொண்டார். இவர் பிரசங்கங்கள் மட்டுமன்றி, ஆலயங்களின் ஊஞ்சல் பாட்டுகள், திரு கனகாம்பிகை அம்மன் ஆலய அந்தாதி நூறு, மற்றும் வரலாற்று புராணங்கள் என்பற்றை பாடியுள்ளார்.

கனகாம்பிகை அம்மன் ஆலயம், கிளிநொச்சி கந்தசாமி ஆலயம், உருத்திரபுரம் சிவன் கோவில், பொறிக்கடவை அம்மன் ஆலயம் போன்ற பல ஆலயங்களில் இறுதி நாள் திருவிழாவின் போது பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டுள்ளார்.