ஆளுமை:சைமன்சில்வா, சத்தியவாணி

From நூலகம்
Name சத்தியவாணி
Pages சைமன் சில்வா
Pages அருளம்மா
Birth 1963.08.28
Place அம்பாறை
Category எழுத்தாளர், பெண்ணியவாதி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சைமன்சில்வா, சத்தியவாணி (1963.08.28) அம்பாறை அக்கரைப்பற்றில் பிறந்தவர். இவரது தந்தை சைமன்சில்வா; தாய் அருளம்மா. அக்கரைப்பற்று இராமகிருஸ்ண மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றார். இலங்கை வானொலியில் இசையும் கதையும் மகளிர் நிகழ்ச்சிகள் போன்றவற்றிற்கு தனது 18 வயதில் ஆக்கங்களை எழுதியதன் ஊடாக எழுத்துத்துறைக்கு பிரவேசித்ததாக தெரிவிக்கிறார் சத்தியவாணி. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உளவள ஆலோசனைகளை வழங்கவும் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் 1994ஆம் ஆண்டு பாதிப்புற்ற பெண்கள் அரங்க நிறுவனத்தில் இணைந்து இன்று வரை இணைப்பாளராக சேவையாற்றி வருகிறார். விடியல் பத்திரிகையின் ஊடாக பெண்களின் பிரச்சினைகள் தொடர்பில் எழுதிள்ளார். பல சஞ்சிகைகளுக்கு பெண் சுரண்டலுக்கு எதிராகவும் கதைகளும் கட்டுரைகளையும் எழுதி வருவதோடு இவற்றிற்கு எதிராக குரல் கொடுத்தும் வருகிறார்.

குறிப்பு : மேற்படி பதிவு வாணி சைமன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 8215 பக்கங்கள் 19-20
  • நூலக எண்: 5562 பக்கங்கள் 18

வெளி இணைப்புக்கள்