ஆளுமை:செல்வநாயகி, உதயகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்வநாயகி உதயகுமார்
பிறப்பு 1963.08.02
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

உ.செல்வநாயகி (1963.08.02 - ) யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட தவில் இசைக் கலைஞர். இவர் தனது மாமனாரான சங்கரப்பிள்ளை முருகையாவிடம் தவில் கலையை நிறைவாகக் கற்றுத்தேறியவராவார். முப்பத்தாறு வருடங்களுக்கு மேலாக இவர் இக் கலையை தொழில் ரீதியாக பேணி செயற்பட்டு வருகின்றார்.

ஈழத்தில் மட்டுமல்லாது வெளிநாடுகள் பலவற்றிற்கும் சென்று தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் இவரை சுவிஸ் பாசல் ஆலய நிர்வாகம் தவில் தென்றல் என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்துள்ளது. மேலும் 2003ஆம் ஆண்டும் இவரை சுவிஸ் நாட்டின் சூரிச் மாநிலத்தில் இருக்கும் முருகன் கோவில் தேவஸ்தானத்தினர் கௌரவித்து லயஞான பூபதி என்ற பட்டத்தினை வழங்கி கௌரவித்துள்ளனர்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 136