ஆளுமை:சிவேந்திர சைதன்யா

From நூலகம்
Name சிவேந்திர சைதன்யா
Pages இராசரத்தினம்
Pages தங்கரட்ணம்
Birth -
Place கல்வியங்காடு
Category பிரம்மச்சாரி(இராசரத்தினம் சாயீசன்)
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யாழ்.கல்வியங்காடு எனும் ஊரில் பிறந்தார்.பாலர் கல்வியை கொழும்பு இந்துக் கல்லூரி மற்றும் யாழ்.கல்வியங்காடு இந்து தமிழ் கலவன் பாடசாலையிலும், இடைநிலை மற்றும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும் பயின்றார். யாழ். பல்கலைக் கழகத்தில் வணிகமாணி பட்டத்தினையும், பட்டப்பின் பொது நிர்வாக டிப்ளோமாவையும் பெற்றுக்கொண்டார். உயர் கணக்கியல் தேசிய டிப்ளோமாவை யாழ் தொழினுட்பக் கல்லூரியிலும், முகாமைத்துவ டிப்ளோமாவை தேசிய திறந்த பல்கலைக் கழகத்திலும் பெற்றுள்ளார். இலங்கை அரச கணக்காய்வு அதிபதி திணைக்களத்தில் கணக்காய்வாளராக யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு போன்ற பல இடங்களில் கடமையாற்றினார்.

யாழ். பல்கலைக் கழகத்தில் சிரேஸ்ட உதவி நிதியாளராகவும் கடமையாற்றினார். கடமை நேரம் தவிர்ந்த ஏனைய நேரங்களில் சத்திய சாயி நிறுவனத்தில் தொண்டாற்றிக் கொண்டிருந்தார். பின் இராமகிருஷ்ண மிஷனில் ஓய்வு நேரங்களில் சென்று பஜனை நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். முழு நேரத்தொண்டு செய்வதற்கு பொருத்தமான இடமொன்றினை தேடிக்கொண்டிருந்தார். அப்போது தான் இந்தியாவில் சென்று மும்பை நகரில் சின்மயா மிஷனின் ஆன்மீக பல்கலைக்கழகமான சாந்திப்பணி சாதனாலயாவில் முழு நேர வேதாந்த கற்கை நெறியினைத் தொடரும் வாய்ப்பைப் பெற்று அதனைப்பூர்த்தி செய்தார்.

பின்னர் யாழ். சின்மயா மிஷனில் சேவையாற்றி தற்போது கிளிநொச்சியில் சின்மயா மிஷன் சுவாமியாக இருந்து தொண்டாற்றி வருகிறார்.