ஆளுமை:சிவறஜி, சிவகுமார்

From நூலகம்
Name சிவறஜி
Pages சிவசுப்பிரமணியம்
Pages மங்கையற்கரசி
Birth
Place யாழ்ப்பாணம் சாவகச்சேரி
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவறஜி, சிவகுமார் யாழப்பாணம் சாவகச்சேரியில் பிறந்த பெண் கலைஞர். இவரது தந்தை சிவசுப்பிரமணியம்; தாய் மங்கையற்கரசி. தனது ஐந்து வயதிலேயே நடனம் கற்பதற்காக சாவகச்சேரியில் உள்ள திலகநர்த்தனாலயத்தில் நடனம் கற்பதற்கு இணைந்துகொண்டார். கலைமாணி வசுந்தரா சிவசோதி இவரது முதல் குரு ஆவார். அதனைத் தொடர்ந்து கலாபூஷணம் யசோதரா விவேகாந்தன் அவர்களிடம் நடனத்தைக் கற்றார். பரதநாட்டிய ஆசிரியர் தர பரீட்சையில் சித்தி பெற்று நாட்டிய கலாவித்தகர் என்ற பட்டத்தைப் பெற்றார்.

ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர்தரம் வரை சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் கற்றார். பாடசாலைக் காலத்திலேயே நடனம், நாடகம், விளையாட்டு என அனைத்துத்துறைகளிலும் சிறந்து விளங்கினார். பரத நாட்டிய அரங்கேற்றம் நல்லூர் இளம் கலைஞர் மன்றத்தில் 2003ஆம் ஆண்டு குரு யசோதா விவேகாந்தனின் நெறியாள்கையில் நடைபெற்றது. 2004ஆம் ஆண்டு லண்டனுக்கு புலம்பெயர்ந்த இவர் ”சிவநர்த்தனாலயம் என்ற பெயரில் நடனப் பள்ளியை ஆரம்பித்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பரதநாட்டியம் கற்பித்து வருகின்றார். நர்த்தனாஞ்சலி என்ற நடன நிகழ்ச்சி வருடம் தோறும் சிறப்பாக நடத்தி வருகின்றார். லண்டன் கவுன்சிலோ முத்தமிழ் பாடசாலையிலும் தெலுங்கு மொழிப் பாடசாலையிலும் பகுதிநேர நடன ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார். நட்டுவாங்கப் பயிற்சியை மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஷ்ணமூர்த்தி அவர்களிடம் கற்று வருகின்றார். கலை நுணக்கங்களை சந்தோஸ் மேனனிடம் கற்றுள்ளார்.

விருதுகள்

நாட்டிய கலாரட்ணம்

வித்தியபூஷணம்