ஆளுமை:சிற்றம்பலம், ஜோன்மணி

From நூலகம்
Name சிற்றம்பலம்
Pages ஜோன்மணி
Pages மனோன்மணி
Birth 1964.03.20
Place கிளிநொச்சி, தொண்டமான் நகர்
Category நாடகக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிற்றம்பலம், ஜோன்மணி அவர்கள் (1964.03.20) நெடுந்தீவை பிறப்பிடமாகக் கொண்ட நாடக கலைஞர் ஆவார். இவரது தந்தை ஜோன்மணி; தாய் மனோன்மணி. ஆரம்ப கல்வியினை நெடுந்தீவு அமெரிக்கன் இடையூளியை பள்ளியிலும் பின்னர் இடைநிலைக்கல்வியினை நெடுந்தீவு உயர்நிலைப்பள்ளியிலும் கற்றார்.

இவர் தந்தையினுடைய காத்தான் கூத்து நாடகத்தில் 12 வயதுச் சிறுவனாக நடித்தார். கிளிநொச்சி மாவட்டம் திக்குவில் கிராமத்தில் 1922 ஆம் ஆண்டு கூத்து பழக்கி அங்குள்ள பிள்ளையார் கோவிலில் சிவராத்திரி விழாவில் மேடையேற்றிய போது பக்தர்கள் அவரை பாராட்டினார்கள்.

இவரது கலைப் பணியையும் கலைப்படைப்பின் ஆற்றலையும் பாடல் சிறப்பினையும் கண்ணுற்ற அந்த ஆலயத்தின் பரிபாலனசபை தங்கப் பரிசு வழங்கி கௌரவித்தது. ஜெயபுரம் வழி பிள்ளையார் கோயில், திக்குவில் அய்யனார் கோயில், கிராஞ்சி பிள்ளையார் கோயில், ஜெயபுரம் காளி கோவில் போன்ற ஜந்து இடங்களில் இவரது கூத்து மேடை ஏற்றப்பட்டது.

இவர்தம் சேவையைப் பாராட்டி மலையாளபுரம் கற்பக முத்துமாரியம்மன் ஆலயம், பாரதிபுரம் அம்மன் ஆலயம் போன்ற பல்வேறு அமைப்புகளால் கௌரவிக்கப்பட்டுள்ளார். இவரது 25 வருட கலைச்சேவையை பாராட்டி கரைச்சி பிரதேச கலாச்சார பேரவையினால் 2014 ஆம் ஆண்டுக்கான கரைச்சி பிரதேச கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதான கரைஎழில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.