ஆளுமை:சறோஜா, தம்பையா

From நூலகம்
Name சறோஜா
Pages தம்பையா
Pages செல்லம்மா
Birth 1924.10.24
Place
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சறோஜா, தம்பையா (1924.10.24) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர். இவரது தந்தை சறோஜா தாய் தம்பையா. நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில கல்வி கற்றார். கே.எஸ்.கனகசிங்கம், சண்முகப்பிரியா சோமசுந்தரம் போன்றோர் இவரின் ஆரம்பக்கால இசை ஆசிரியர்களாகும். 1960ஆம் ஆண்டு இந்தியா சென்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசை பயின்றார். அங்கு வாய்ப்பாட்டும் வீணையும் கற்று முதற்தரத்தில் சித்தி பெற்று சங்கீதபூஷணம் பட்டம் பெற்றார்.

1964ஆம் ஆண்டு முதல் 1968ஆம் ஆண்டு வரை மஸ்கெலியாவில் ஆசிரியராக பணியாற்றினார். தொடர்ந்து தலவாக்கொல்லை ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராக கடமை புரிந்தார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகளில் இசை ஆசிரியராக கடமையாற்றிய இவர் 1990ஆம்ஆண்டு வடமராட்சிக் கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகராகக் கடமையாற்றி 2002ஆம் ஆண்டு உதவிக் கல்விப் பணிப்பாளராக தரமுயர்ந்து 2003ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

விருதுகள்

கலாகேசரி – இந்து சமய விவகார அமைச்சு

இசைக்கலைவாணி வடமராட்சி கலாசாரப் பேரவை