ஆளுமை:சர்வம் கைலாசபதி

From நூலகம்
Name சர்வமங்களம்
Pages மாணிக்க இடைக்காடர்
Pages சிவமங்களம்
Birth 1944
Place
Category பெண்ணியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
SarvamanhalamKailashapathi.jpg

சர்வம் என எல்லோராலும் அழைக்கப்படும் சர்வமங்களம் கைலாசபதி அவர்கள் சிவமங்களம் மாணிக்க இடைக்காடர் என்போருக்கு மகளாக 1944 இல் பிறந்தார். பம்லப்பிட்டி கன்னியர் மடத்தில் இல் கல்வி கற்று தனது மேற்படிப்பை பங்கொக்கில் இல் தொடர்ந்தார்.

பெண்களை ஆளுமைப்படுத்துவதிலும் வழிப்படுத்துவதிலும் 1980 கள் முதல் இன்று வரை செயற்பட்டுவரும் இவர் பல NGOக்களிலும் பெண்கள் அமைப்புக்களிலும் அங்கம்வகித்த ஒருவராவர். மும்மொழிகளிலும் வல்லுனரான இவர் இளையதலைமுறைகளை வளர்த்துவிடுவதில் பெரும் பங்ககாற்றி வருகின்றார். பெருநிழல் தரும் ஆலமரமாக இருக்காது விலகி நின்று தன் நிழலில் நிற்பவர்களை பெருவிருட்சமாக்க வேண்டும் எனும் கொள்கை உடையவராவர். மத சார் மூடநம்பிக்கைகளில் மூழ்கிவிடாமல் இளம் சந்ததியினரை குறிப்பாக பெண்களை வழி நடத்தவேண்டும் என்பது இவரது அவா ஆகும். பெண்கள் எப்பொழுதும் பன்முகதிறன் (multi tasking) உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது இவரது வழிகாட்டலாகும். சிந்தனை மாற்றத்தை வாழ்ந்து காட்டலினூடாக வழி காட்ட வேண்டும் எனும் கொள்கை உடையவர்.

இவரது செயற்பாடுகளாக அபிவிருத்தி துறையில் பால் சமத்துவம் தொடர்பான ஆலோசகராக இருந்தார். சன்மார்க்கா எனும் புனைப்பெயரில் வையகத்தை வெற்றி கொள்ள, சொல்லாத சேதிகள் போன்றைவற்றில் கவிதைகள் பல எழுதியுள்ளார். ஆற்றுப்படுத்தல் ஆளுமைப்படுத்தல் செயற்பாடுகளில் வல்லவராக திகழ்ந்தார். சொல் பெண்கள் சஞ்சிகையில் இவரது பங்கு மிகப்பெரியது. பல காலமாக இச்சஞ்சிகையின் இறுதி உற்று நோக்குனராக பல காலம் சேவையாற்றுகிறார். பெண்கள் ஆய்வு வட்டம் என்ற அமைப்பின் உருவாக்குனர்களில் ஒருவர் போன்றைவற்றறைக் குறிப்பிடலாம்.

மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெண்கள் செல்லாமல் இருப்பதற்கு என்ன செய்யலாம் தோட்ட தொழிலாள பெண்களுக்கு எதிரான அநீதிகழுக்கு என்ன செய்ய வேண்டும் வருமாணம் போதாமையால் தற்கொலை செய்யும் பெண்களுக்காக எவ்வாறு செயற்பட வேண்டும் பெண்களுக்கான காணி உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக எவ்வாறு செயற்பட முடியும் எனும் வகையில் தனது சிந்தனைகளை திருப்பி விட்டுள்ளார் இவர் பெண்ணியம் எனும் பேச்சை எடுத்தாலே மகா குற்றமாக நோக்கும் 1980 ன் மாபெரும் பெண்ணிய செயற்பாட்டாளர்களில் ஒருவராவர். இலங்கைத் தமிழ்ப்பெண் கவிஞர்களது முதலாவது கவிதைத் தொகுதி என்ற பெருமையுடைய சொல்லாத சேதிகள் பெண்கள் ஆய்வு வட்டம் 1986 எனும் நூலின் பல கவிதைகள் இவருடையது.