"ஆளுமை:சந்திரபோஸ், கஜானா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கஜனா| தந்தை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 12: வரிசை 12:
  
 
குறிப்பு : மேற்படி பதிவு சந்திரபோஸ் கஜானா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
 
குறிப்பு : மேற்படி பதிவு சந்திரபோஸ் கஜானா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
 +
 +
[[பகுப்பு:பெண் ஆளுமைகள்]]
 +
[[பகுப்பு:பெண் சமூக சேவையாளர்கள்]]
 +
[[பகுப்பு:பெண் கலைஞர்கள்]]

08:53, 13 ஜனவரி 2019 இல் நிலவும் திருத்தம்

பெயர் கஜனா
தந்தை சந்திரபோஸ்
தாய் ரேணுகா
பிறப்பு 1991.06.12
ஊர் அம்பாறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சந்திரபோஸ், கஜானா (1991.06.12) அம்பாறை கல்முனையில் பிறந்த கலைஞர், இவரது தந்தை சந்திரபோஸ்; தாய் ரேணுகா. ஆரம்பக் கல்வியை கல்முனை சுவாமி விபுலானந்தா வித்தியாலயத்திலும் உயர்தரத்தை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும் கல்வி கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் கற்கை நெறியை கற்றுள்ளார். பாடசாலைக் காலம் முதல் விளையாட்டு, சமூகசேவை, பேச்சு, நடிப்பு என பலதுறைகளில் ஆர்வம் உள்ளவர் கஜானா. தனது 12 வயதிலேயே ஊடகத்துறையில் செய்தி வாசிப்பாளராக வரவேண்டுமென்ற ஆர்வம் காரணமாக தற்பொழுது இணைய வானொலியில் கடமையாற்றிகொண்டிருக்கிறார். சமூக சேவையாளராகவும் தன்னை இனங்காட்டிக்கொள்ளும் இவர் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஈடாட்டம் எனும் குறும்படத்திற்கு கதை வசனம் எழுதியதுடன் இயக்கியும் உள்ளார். இதன் ஊடாக இவரே கல்முனை பிரதேசத்தின் முதலாவது பெண் இயக்குனர் என்ற பெருமையினையும் பெற்றுள்ளார். அத்துடன் இப்படத்தின் பிரதான பாத்திரம் ஏற்றும் நடித்துளளார். மேலும் பல குறும்படங்களின் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கிறார் இந்த இளம் கலைஞர்.

குறிப்பு : மேற்படி பதிவு சந்திரபோஸ் கஜானா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.