ஆளுமை:குலமணி, மாணிக்கம்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 20:41, 13 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குலமணி| தந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குலமணி
தந்தை மாணிக்கம்
தாய் சின்னம்மா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம் நயினாதீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குலமணி, மாணிக்கம் யாழ்ப்பாணம் நயினாதீவைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை மாணிக்கம்; தாய் சின்னம்மா. ஆரம்பக் கல்வியை நயினாதீவு நாகபூசணி வித்தியாசாலையிலும் நயினை மகாவித்தியாலயத்திலும் கற்றார். உயர்தரக் கல்வியை யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியிலும் கற்றார். 1961ஆம் ஆண்டு திருமலைக் கச்சேரியில் எழுதுவினைஞராக நியமனம் பெற்றார். எழுதுவினைஞர் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த இவர் அச்சங்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான எழுச்சியின் துணை ஆசிரியராகவும் இருந்தார்.

1969ஆம் ஆண்டு பெப்ரவரி 7ஆம் திகதி திருமணப்பந்தத்தில் இணைந்த இவர் 1969ஆம் ஆண்டு 29ஆம் திகதி கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழியைப் படிக்க மறுத்த அரச தமிழ் ஊழியர் வெளியேற்றப்பட வேண்டு என்ற திட்டத்திற்கமய (ஐக்கிய தேசியக் கட்சி அரசு) பணியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அச்சுத் தொழிலை ஆரம்பித்த இவருக்கு ஆத்மதிருப்தி தராத தொழிலாக இருந்தாலும் நாளடைவில் இத்துறையில் உயர்வை கண்டார். பல எழுத்தாளர்கள், சமூகவியலாளர்களுடன் பழகும் சந்தர்ப்பம் இத்தொழிலின் ஊடாக இவருக்கு கிடைத்தது. 1981ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலைஞர் கருணாநிதி பொதுப்பணி மன்றத்தில் துணைத் தலைவராகவும் அதன் மாத இதழான தமிழோசை இதழின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

அமுதரின் அறிவு இயக்க்திலிருந்து அதன் இலக்கிய அமைப்பாக தமிழ் கதைஞர் வட்டம் அதன் உறுப்பினராகவும் இருந்துள்ளார். தகவத்தின் சிறுகதை மதிப்பீட்டுத் தெரிவுக்குப் பொறுப்பாகவும் இருந்துள்ளார். 1984ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முதன் முதலில் நவீன (ஓவ்செற்) அச்சுமுறையும், கிராபிக்கமெரா முறையும் அறிமுகப்படுத்தப்படக் காரணமாக இருந்துள்ளார். 1997இல் கொழும்பில் சக்தி என்ரபிறைசஸ் அச்சகம் உருவாக்கினார். 2003ஆம் ஆண்டு லண்டன் சென்ற இவர் திருமுருகன் அறிவகம் மூலம் லண்டன் தமிழர் தகவல் மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார். அரவிந்தன் என்ற பெயரில் அரசியல் கட்டுரைகளையும் கோத்திரன் என்ற பெயரில் கட்டுரைகளையும் புனிதன் என்ற பெயரில் சிறு செய்திகளையும் எழுதியுள்ளார்.

சுடரொளியில் கட்டுரைகள் எழுதியுள்ள இவர் 2009ஆம் ஆண்டு செப்ரெம்பர் செங்கதிர் இதழில் கதைகூறும் குறள் என்னும் தலைப்பில் எழுதி வந்துள்ளார். தமிழர் சுயாட்சிக் கழகத்தின் விடுதலை சஞ்சிகையிலும் எழுதியிருக்கின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 9872 பக்கங்கள் 3-6