ஆளுமை:கவிச்சுடர் சிவரமணி

From நூலகம்
Name சிவரமணி
Pages இராசரத்தினம்
Pages சிவஞானவதி
Birth 1972.11.06
Pages -
Place யாழ்ப்பாணம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவரமணி, இராசரத்தினம் (1972.11.06) யாழ்ப்பாணம், சாவகச்சேரியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இராசரத்தினம்; தாய் சிவஞானவதி. எழுத்தாளர் சிவரமணி, தனது கல்வியை யாழ் மீசாலை வீரசிங்கம் மாகவித்தியாலயம், கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம் ஆகியவற்றில் கற்றார். இவருக்கு இரண்டு சகோதரர்களும், ஒரு சகோதரியும் உண்டு. பிறந்த இடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் எழுத்தாளர் சிவரமணி தற்பொழுது திருகோணலையை தனது வசிப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே இலக்கிய ஆர்வம் உள்ளவராகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பல மேடை நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். சிறிது காலம் எழுத்துத்துறையில் இருந்து விலகியிருந்தவர் தற்பொழுது முகநூல் தனக்கு தந்த முகவரியினால் தன்னை மீண்டும் எழுத்துத்துறைக்கு பிரவேசிக்க வைத்துள்ளதென தெரிவிக்கின்றார். முகநூல் மூலம் இயங்கும் முதன்மையான பல அமைப்புக்கள் மற்றும் இலங்கையின் தடாகம் கலை இலக்கிய வட்டம், உலகப்பாவலர் மன்றம் வழங்கிய 25 விருதுகளை இவர் பெற்றுள்ளார். தடாகம் கலை இலக்கியப் போட்டியில் இவரது கவித்தீபம் என்ற கவிதை இரண்டாமிடத்தை பெற்றது. இவரின் ஆக்கங்கள் பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. தொடுவானில் சிதறல்கள் என்னும் கவிதை நூலை 2015ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள எழுத்தாளர், அவள் ஒரு தனித்தீவு எனும் கதையும் கவிதையும் நாவல் இலக்கியம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு கவிச்சுடர் சிவரமணி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • கவித்தீபம்
  • தொடுவானில் சிதறல்கள்
  • தனித்தீவு