ஆளுமை:கருணாதேவி, அற்புதராஜா

From நூலகம்
Name கருணாதேவி
Pages சின்னவி
Pages பார்வதியம்மாள்
Birth 1953.01.09
Place முள்ளியவளை
Category இசைக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கருணாதேவி, அற்புதராஜா முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்னவி; தாய் பார்வதியம்மாள். இவரின் கலைப் பயணத்திற்கு மூல காரணம் இவரின் தாயாரும் இவரின் தாய் மாமனான கூத்து நாடக நடிகரும் பாடகருமான சிவனார் என்கிறார் கருணாதேவி. முல்லைத்தீவு வித்தியானந்தாக் கல்லூரியில் கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார்.

பாடசாலைக்காலத்திலேயே இவரை சங்கீதப் போட்டிகளிலும் பண்ணிசைப் போட்டிகளிலும் பங்குப்பெறச் செய்து பல வெற்றிகளை பெற உழைத்தவர் சங்கீத ஆசிரியரான தங்கணாச்சி மயில்வாகனம் என்று நினைவுகூருகிறார். சங்கீதத்தில் தனது திறமையை வெளிக்கொண்டுவர சங்கீத சபை பரீட்சை தேர்வுகளில் வெற்றி பெறவும் யாழ் புகழ் வித்துவான்களான திருவாளர்கள் பாலசிங்கம் கணபதிப்பிள்ளை, கருணாகரன் ஆகியோரின் வழிநடத்தலே என்பதையும் குறிப்பிடுகிறார்.

சங்கீத ஆசிரியராகவும், 1999ஆம் ஆண்டு துணுக்காய் வலயக்கல்வி பிராந்தியத்தில் உதவிப் பணிப்பாளராக பதவி வகித்துள்ளார். உதவிக் கல்விப் பணிப்பாளராக 15 வருடங்கள் கடமையாற்றியுள்ளார். உதவிப் பணிப்பாளராக இருக்கும் காலத்தில் சங்கீத, நடனம், சித்திரம், நாடகக் கருத்தரங்குகளையும் ஏற்படுத்தி இத்துறைகளை மேலோங்கச் செய்தார். 12.07.2014ஆம் ஆண்டு புதுவையாள் நுண்கலைக் கல்லூரியை ஆரம்பித்து அதன் அதிபராகவும் இருந்து கலைச்சேவை செய்து வருகிறார். இம் மன்றத்தின் ஊடாக சித்திரம், கர்நாடக சங்கீதம், பரதநாட்டியம், மிருதங்கம், தபேலா, ஓகன், பண்ணிசைஆகிய பாடங்களை கற்பித்து வருகிறார்.

கருணாலய சங்கீத நடனப் பயிற்சியின் இயக்குநராக இருந்து வரும் இவர் இந்தப் பள்ளி 10.01.2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது. இப்பள்ளியை தனக்கு பின்னரும் கொண்டு நடத்தப்பட வேண்டும் என்ற தூர நோக்கில் இவரின் இரு புதல்விகளையும் நடனப் பட்டதாரிகளாக்கி இருக்கிறார் இவர்கள் இப்பள்ளியின் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவரின் கலைத்துறை சார்ந்த பள்ளி அமைப்பதற்கும் இவரின் ஏனைய செயற்பாடுகளுக்கும் இவரின் கணவர் உறுதுணையாக இருந்து வருவதாக பெருமையுடன் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

பாரம்பரிய கலைஞர் (துணுக்காய் வலயம்) – 2005ஆம் ஆண்டு.

கலை வழிகாட்டி முல்லைத்தீவு மாவட்டம் – 2006ஆம் ஆண்டு.

வடமாகாண முதலமைச்சர் விருது இசை – 2014ஆம் ஆண்டு.

கிரீடம் தமிழர் முன்னேற்றக்கழகம் – 2014ஆம் ஆண்டு.

கலாபூஷணம் விருது – 2016ஆம் ஆண்டு.

புதுவைக் கலைச்சுடர் – 2016ஆம் ஆண்டு.

குறிப்பு : மேற்படி பதிவு கருணாதேவி, அற்புதராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.