ஆளுமை:கமலா, தம்பிராஜா

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:32, 11 நவம்பர் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கமலா
தந்தை தம்பிராஜா
தாய் நேசம்மா
பிறப்பு 1944.05.12
இறப்பு 2018.02.07
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கமலா, தம்பிராஜா யாழ்ப்பாணம் வண்ணார்ப்பண்ணையில் பிறந்த ஊடகவியலாளர். கொழும்பு, கனடா ஆகியவற்றை வசிப்பிடமாகக் கொண்டவர். இவரது தந்தை தம்பிராஜா; தாய் நேசம்மா. கலைப்பட்டதாரியான கமலா வீரகேசரியில் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வீரகேசரி பிரசுரமாக நான் ஓர் அனாதை என்ற நாவலை வெளியிட்டுள்ளார். வீரகேசரி ஆசிரியர் பீடம், தகவல் திணைக்களம், ஈரானிய தூதரகம், இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். கனடாவில் குடியேறிய ரொறன்ரோ தேமதுரம் வானொலி, ரொறன்ரோவில் ஆரம்பிக்கப்பட்ட TVI தொலைக்காடசியில் செய்தி வாசிப்பாளராகவும் செய்தி ஆசிரியராகவும் பணியாற்றினார். ரொறன்ரோ தமிழோசை, CTBC வானொலி, கீதவாணி முதலிய வானொலிகளில் செய்திகளைத் தொகுத்து வாசித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர், இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர், இலங்கையின் முதலாவது தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர், இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சி தயாரிப்பாளர், முதலாவது மின் ஊடகத்தில் திரைப்படத்தில் நடித்த முதலாவது பெண் ஊடகவியலாளர், அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்கு வந்து செய்தி வாசித்த பெண் ஊடகர் என்ற பெருமைகளை சொந்தக்காரர் கமலா தம்பிராஜா அவர்கள்.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:கமலா,_தம்பிராஜா&oldid=331485" இருந்து மீள்விக்கப்பட்டது