ஆளுமை:கணேசபிள்ளை, இளையதம்பி

From நூலகம்
Name கணேசபிள்ளை
Pages இளையதம்பி
Pages சிவபாக்கியம்
Birth 1949.07.27
Place அல்லைப்பிட்டி
Category சமூக சேவையாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கணேசபிள்ளை, இளையதம்பி (1949.07.27 - ) யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சமூக சேவையாளர். இவரது தந்தை இளையதம்பி; தாய் சிவபாக்கியம். வண்ணார்பண்ணையில் வசித்து வந்த இவர் சன்மார்க்க போதன ஆங்கில பாடசாலையிலும், பரமேஸ்வராக் கல்லூரியிலும் உயர்தரம் (SSC )வரை கற்றார்.

1969 ஆம் ஆண்டுகளில் விவசாயப்படையில் ஒப்பந்த சேவையிலும், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் கொந்தராத்துக்காரராகவும் இருந்தார். கியுடெக் எனப்படும் யாழ். யாழ்.மனித முன்னேற்ற நடு நிலையத்தில் கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இணைப்பாளராக பதினெட்டு ஆண்டுகள் பணியாற்றினார். யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாரிய மனிதாபிமானப்பணிகளை இந்நிறுவனத்தினூடாக மேற்கொண்டார். பதின்மூன்று ஆண்டுகள் கிளிநொச்சி மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவராகவும் பணியாற்றினார். முன்னாள் அரச அதிபர் திரு.இராசநாயகத்தின் ஆலோசனையுடன் அவரோடு நெருங்கிச் செயற்பட்டார். வண்ணார் பண்ணை வாசிகசாலை தலைவராகவும், தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினராகவும், ARCHINOVA நிறுவனத்தின் இணைப்பாளராகவும், கல்வி அபிவிருத்திப்பேரவையின் தலைவராகவும், கரைச்சி வடக்கு கடற்றொழிலாளர் சமாசத்தின் பொதுமுகாமையாளராகவும் ,வன்னேரிக்குளம் முதியோர் இல்லத்தின் ஆரம்ப கால நிர்வாக உறுப்பினராகவும், முறிகண்டி பிரதேச நலன்புரி நிறுவனத்தின் தலைவராகவும், கிளிநொச்சி வைத்தியசாலையின் நலன்புரி நிலையத் தலைவராகவும், பொன்னகர் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவராகவும், சமாதான நீதவானாகவும் இருந்துள்ளார்.