ஆளுமை:கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கணபதிப்பிள்ளை
தந்தை சுப்பிரமணியம்
தாய் பார்வதிப்பிள்ளை
பிறப்பு 1947.09.05
இறப்பு -
ஊர் நெடுந்தீவு
வகை கூட்டுறவாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


கணபதிப்பிள்ளை, சுப்பிரமணியம் (1947.09.05 - ) யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த கூட்டுறவாளர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் பார்வதிப்பிள்ளை.நெடுந்தீவு கோட்டைக்காடு மங்கயற்கரசி வித்தியாசாலையில் ஆரம்பக்கல்வி பயின்றார். நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் சா/த வரை பயின்றார். 1967 ஆம் ஆண்டளவில் கிளிநொச்சி-ஸ்கந்தபுரம் பகுதியில் குடியமர்ந்தார். 1971 ஆம் ஆண்டளவில் வட்டக்கச்சி விவசாயப் பயிற்சி பாடசாலையில் விவசாயப்பயிற்சி பெற்றார். இக்காலப்பகுதியில் திருவையாறு படித்த வாலிபர் திட்டத்தில் காணி பெற்றார். 1973 ஆம் ஆண்டு கரைச்சி தெற்கு ப.நோ.கூ.சங்கத்தில் 17 வருடங்களாக கிளை முகாமையாளராக இருந்து சிறந்த கிளை முகாமையாளராக கௌரவிக்கப்பட்டார். அதன் பின்னர் கூட்டுறவு கிராமிய வங்கியின் கிளைமுகாமையாளராக 17 வருடங்களும், போராட்ட காலத்தில் தொடரணி உத்தியோகத்தராக 7 வருடங்களும், பொது முகாமையாளராக 5 வருடங்களும் கடமையாற்றினார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட கிராமிய வங்கிகளின் சமாசத்தின் பொதுமுகாமையாளராகவும் 7 வருடங்கள் கடமையாற்றினார். திருவையாறு படித்த வாலிபர் திட்ட விவசாய ப.நோ.கூ.சங்கத்தில் தலைவராகவும் இருந்தார்.

தாய்லாந்தில் நாட்டில் விதைநெல் பதப்படுத்தல் பயிற்சி பெற்றார். மாவட்ட கூட்டுறவு சபையின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்தார். கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியத்தின் உபதலைவராகவும் இருக்கின்றார். வட மாகாண சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனம் அமைப்பின் உருவாக்கி செயற்பட்டு வருகின்றார். ஸ்கந்தபுரத்தில் ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தினை மீள இயக்குவதில் முயற்சி மேற்கொண்டு வருகிறார். 6 வருடங்களாக கிளிநொச்சி மாவட்ட சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவராகவும் உள்ளார். திருவையாறு மேற்கு கிராம அபிவிருத்தி சங்கத் தலைவராகவும், ஏற்று நீர்ப்பாசனத் திட்ட கமக்கார அமைப்பின் தலைவராகவும் இருந்தார். திருவையாறு திருமகள் சிக்கனக்கடன் வழங்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவராக 30 வருடங்களாக இருந்துள்ளார்.

சிறந்த கூட்டுறவுப்பணியாளன் எனும் விருது, கரைச்சி தெ.ப.நோ.கூ. சங்கத்தின் சிறந்த கூட்டுறவாளர் விருது, மாவட்டக் கூட்டுறவு சபையின் சிறந்த கூட்டுறவாளர் விருது, கரைச்சி பிரதேச சபையின் சிறந்த கூட்டுறவாளர் விருது ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.