ஆளுமை:இரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி

From நூலகம்
Name சுமதி
Pages சண்முகநாதன்
Pages இரத்தினம்
Birth 1950.10.26
Place யாழ்ப்பாணம்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி (1950.10.26) யாழ்ப்பாணத்தில் பிறந்த கலைஞர், இலங்கை வானொலியின் நாடகத்துறையின் தந்தை என்று அழைக்கப்படும் சானா என்னும் சண்முகநாதன் இவரது தந்தை; தாய் இரத்தினம். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை பம்பலப்பிட்டி திருக்குடும்ப கன்னியர்மடத்தில் கல்வி கற்றவர். மூன்று ஆண் பிள்ளைகளுக்கு தாயான இவர் பிரபல ஊடகவியலாளர் வாமலோசனின் தாய் என்பது குறிப்பிடத்தக்கது. 1972ஆம் ஆண்டு காரியதரசியாக இலங்கை வானொலியில் இணைந்துகொண்டார். அத்தோடு இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் பகுதி நேர வானொலிக் கலைஞராக பணியாற்றியதுடன் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திலும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்திலும் வானொலி, தொலைக்காட்சி தமிழ் நாடகங்களிலும் நடித்தும் உள்ளார். உத்துருகுரு சட்டன் என்னும் சிங்கள தொலைக்காட்சி நாடகத்திலும் சிங்களப்படமான யாலுவோ என்னும் திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். நாடகப் பிரதிகளை எழுதும் திறமைகொண்ட சுமதி. இலங்கை வானொலியில் ஒலிபரப்பான மறதி மணியன் என்னும் நாடகத்திற்கான பிரதி எழுதி அதில் நடித்தும் உள்ளார். இந்நாடகம் பலரின் பாராட்டை பெற்றதுடன் சர்வதேச உண்டா விருது இந்த நாடகத்தின் பிரதியாக்கத்திற்கும் இந்நாடகத்தில் நடித்தமைக்காகவும் சுமதி பாலஸ்ரீதரன் அவர்களுக்கு கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும். 1983ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தைத் தொடர்ந்து இவர் பருத்தித்துறை சிமெந்து நிறுவனம் பின்பு இதன் கிளையான கொழும்பு சிமெந்து நிறுவனத்தில் காரியதரிசியாகவும் பணிப்புரிந்ததுடன் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தபானம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் ஆங்கில செய்தி உதவியாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

விருது சர்வதேச உண்டா விருது - நாடகப்பிரதியாக்கம், நடிப்பு

குறிப்பு : மேற்படி பதிவு இரகுபதி பாலஸ்ரீதரன், சுமதி அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.