ஆளுமை:இந்திராணி, புஸ்பராசா

From நூலகம்
Name இந்திராணி
Pages தாமோதரம்பிள்ளை
Pages செல்லத்தங்கம்
Birth 1950.10.01
Pages -
Place மட்டக்களப்பு
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இந்திராணி புஸ்பராசா (பிறப்பு: 1950.10.01) மட்டக்களப்பு, கல்லடி உப்போடையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை; தாய் செல்லத்தங்கம். ஆரம்பக் கல்வியை மாத்தறையில் கற்ற இவர் பின்னர் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் கல்வி கற்றார். விஞ்ஞான பாட ஆசிரியரான எழுத்தாளர் 1973ஆம் ஆண்டு ஆசிரியர் தொழில் இணைந்து கொண்டார். அதிபராக 1991ஆம் ஆண்டு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பதவி வகித்த எழுத்தாளர் இந்திராணி, புஸ்பராசா 2010ஆம் ஆண்டு ஓய்வுப் பெற்றார்.

இவர் தனது 16ஆவது வயதில் அதாவது 1966ஆம் ஆண்டு எழுத்துத்துறைக்கு பிரவேசித்துள்ளார். வானொலி, பத்திரிகைகள், சஞ்சிகைகட்கு தொடர்ந்து எழுதி வந்துள்ளார். இவரின் முதல் சிறுகதை நூல் குயில்குஞ்சுகள் 2015இல் வெளிவந்தது. இது சிறுவர்களுக்கான நூலாகும். இந் நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அமைச்சினால் சிறந்த நூலுக்கான விருதை 2016ஆம் ஆண்டு பெற்றது. அதே ஆண்டு இலங்கை அரசினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. இவரால் எழுதப்பட்ட கற்பெனப்படுவது எனும் சிறுகதை 2010ஆம் ஆண்டில் தகவத்தின் 2ஆம் பரிசை பெற்றது. ஆக்க இலக்கியம், நாடகம் எனும் துறைகளில் விருது பெற்றுள்ளார். பன்முகத் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ள எழுத்தாளர் ஒரு மேடைப்பேச்சாளருமாவார். மேடை பேச்சுக்கு அகில இலங்கை ரீதியில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞான நுல்கள் நான்கும், சிறுவர் செயன்திறன் விருத்தி பாகம் 1, பாகம் 2 ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார்.

குறிப்பு : மேற்படி பதிவு இந்திராணி புஸ்பராசா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

Resources

  • நூலக எண்: 15231 பக்கங்கள் 7-9

படைப்புகள்

  • குயில்குஞ்சுகள் (சிறுகதை நூல்)
  • கற்பெனப்படுவது (சிறுகதை)
  • சிறுவர் செயன்திறன் விருத்தி பாகம் 1
  • சிறுவர் செயன்திறன் விருத்தி பாகம் 2

வெளி இணைப்புகள்