ஆளுமை:அஸீமா பேகம்

From நூலகம்
Name அஸீமா பேகம்
Pages மொஹமட் நஜிமுதீன்
Pages ஸம்ஸுன் நயீமா
Birth
Place கம்பஹா
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஸீமா பேகம் கம்பஹா மாவட்டம் பூகொடையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் நஜிமுதீன்; தாய் ஸம்ஸுன் நயீமா. பேராதனைப் பல்கலைக்கழகப் புவியியல் சிறப்புப்பட்டம் பெற்றவர். ஆசிரியரான இவர் பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார். ”இழிவுரனோ” எனும் தலைப்பில் இவர் எழுதிய கவிதை அரங்கம் என்னும் கவிதைப் பக்கத்தில் (2002)ஆம் ஆண்டு பிரசுரமானது. இதுவே இவரின் எழுத்துத்துறைக்குள் பிரவேசிக்க காரணமாகியது. தினகரன் பத்திரிகையின் வாரமஞ்சரியின் கவிதைப் பூங்காப் பக்கமே இவர் தொடர்ந்து எழுதுவதற்கு களம் அமைத்துக்கொடுத்ததாக நன்றியுடன் நினைவுகூரும் எழுத்தாளர். 2016ஆம் ஆண்டு இவரின் முதலாவது நூலான செங்குருதியும் பச்சோந்தியும் கவிதை நூலில் பெரும்பாலான கவிதைகள் தினகரன் வாரமஞ்சிரியில் பிரசுரமானவையே இடம்பிடித்துள்ளன. தினகரன் பத்திரிகை மற்றும் அல்ஹஸனாத், அல் இன்ஷிரவாஹ், ஓசை சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன.

வெளி இணைப்புக்கள்

பூகொடையூர் அஸீமா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் நூல் விமர்சனம் ஸ்ரீலங்காமுஸ்லிம் இணையத்தில்

அஸீமா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் நூல் வெளியீட்டு விழா தொடர்பாக ஸ்ரீலங்காமுஸ்லிம் இணையத்தில்