ஆளுமை:அஷ்ரப், முஹம்மது ஹுசைன்

From நூலகம்
Name அஷ்ரப்
Pages முஹம்மது ஹுசைன்
Pages மதீனா உம்மா
Birth 1948.10.23
Pages 2002.09.16
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அஷ்ரப், முஹம்மது ஹுசைன் (1948.10.23 - 2002.09.16) கல்முனை, சம்மாந்துறையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது ஹுசைன்; தாய் மதீனா உம்மா. இவர் கல்முனை உவெஸ்லி கல்லூரி, கொழும்பு சட்டக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி கற்றார். இவர் உவெஸ்லி கல்லூரியில் கல்வி கற்கும் காலத்திலேயே இவரது முதல் கவிதை 1962.09.16 ஆம் திகதி தாய் என்னும் மகுடத்தின் கீழ் தேசியமுரசு பத்திரிகையில் இடம்பெற்றது.

இவரது கவிதைகளை சிறுவர் கவிதைகள், இஸ்லாமிய சமூகக் கவிதைகள், பொதுக் கவிதைகள், நவீன கவிதைகள், சமூக எழுச்சிக் கவிதைகள் போன்ற பிரிவுகளில் வகைப்படுத்தலாம். இவரது கவிதைகள் தினபதி, புதுப்பாதை, விவேகி, தினகரன், தமிழ் முரசு, புயல், புதுமைக்குரல் போன்ற பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் இவரால் எழுதப்பட்ட அனேகமான கவிதைகள் தொகுக்கப்பட்டு நான் எனும் நீ என்னும் தலைப்பில் 600 பக்கங்களைக் கொண்ட கவிதை நூலாக 1999.10 ஆம் மாதம் வெளியானது. தமிழ் மொழியில் அதிக கவிதைகளை இவர் எழுதியுள்ள போதிலும் ஆங்கிலத்தில் A Ride to the Beach என்னும் தலைப்பில் இவர் எழுதிய கவிதை 1968.05.01 ஆம் திகதி Scholar என்னும் மாணவர் பத்திரிகையில் வெளியானது.

இவற்றையும் பார்க்கவும்

Resources

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 56-60
  • நூலக எண்: 16357 பக்கங்கள் 277-287