ஆளுமை:அஷ்ரபா, நூர்தீன்

From நூலகம்
Name அஷ்ரபா
Pages சேகு நூர்தீன்
Pages ஜெமீலா உம்மா
Birth 1962
Place திருகோணமலை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அஷ்ரபா, நூர்தீன் (1962) திருகோணமலை, பாலையூற்றில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை சேகு நூர்தீன்; தாய் ஜெமீலா உம்மா. இவரின் கணவர் அ.வா.முஹ்சின் ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தயாராவார். 1980ஆம் ஆண்டு காலப் பகுதியில் இருந்தே ஈழத்து இலக்கியத் தளத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள பெண் படைப்பாளியாவார். கவிதைத் துறையில் தனி ஆளுமை கொண்ட அஷ்ரபாவின் வானொலி நாடகங்கள் இவரின் பன்முகத்திறமைக்கு ஒரு சான்றாகும். 1982ஆம் ஆண்டு சுடர் சஞ்சிகையின் தமிழன்னை சிரிக்கின்றாள் என்னும் கவிதையின் ஊடாக இலக்கிய உலகிற்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். சிந்தாமணி, தினகரன், சூடாமணி, சரிநிகர் போன்ற பத்திரிகைகளிலும் தாகம், வசந்தம் போன்ற சஞ்சிகைகளிலும் இலங்கையில் வெளிவந்த பல கையெழுத்துச் சஞ்சிகைகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. ஆகக் குறைந்த பட்சம் என்ற பெயரில் இவரது முதலாவது கவிதைத் தொகுதி 2012ஆம் ஆண்டு வெளிவந்தது. 2016ஆம் ஆண்டு நேசிப்பு என்ற கவிதைத் தொகுதியை வாசுகி என்ற மற்றுமொரு பெண் கவிதாயினியுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ளார். இவரின் கவிதை பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளை பேசிய போதிலும் முஷ்ரபா தன்னை பெண்ணியவாதியாக அடையாப்படுத்துவதில்லை.

விருதுகள் 2004ஆம் ஆண்டு திருகோணமலை பிரதேச சபை பிரதேச சாகித்திய விருது.

படைப்புகள்

வெளி இணைப்புக்கள்