ஆளுமை:அழகரெட்ணம், அழகன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 19:39, 15 ஆகத்து 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அழகரெட்ணம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அழகரெட்ணம்
தந்தை அழகன்
பிறப்பு 1932.09.27
ஊர் மட்டக்களப்பு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகரெட்ணம், அழகன் (1932.09.27) மட்டக்களப்பு புன்னச்சோலையைச் சேர்ந்த ஆளுமை. இவரது தந்தை அழகன். சிறுவயது முதல் கிராமியக்கலையில் ஈடுபாடு உடைய இவர் நாட்டுக்கூத்து, நாடகம், கரகம், கும்பி, நாட்டு வைத்தியம், மந்திரம் ஆகியவற்றில் மிகவும் ஈடுபாடு உடையவராக காணப்பட்டார்.

அருந்தராணி, குருகேத்திர நாடகம், சித்திரரேகை, அரசன் ஆணை, புலேந்திரன் கனவு மாலை என்ற கூத்துக்களுக்கு அண்ணாவியராகவும் விளங்கியுள்ளார். வள்ளி திருமணம், திருவிளையாடல், ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி நாடகங்கள் காத்தவராயன் கரகாட்டம், மாரியம்மன் கோலாட்டம், மாரியம்மன் கும்மியென இவரின் ஆளுமைகள் அடங்கியுள்ளன.

புன்னச்சோலைக் காளிகோவின் பிரதம பூசகரான இவர் மந்திரக்கலைக்கு புத்துயிரளித்து வருகிறார். அஞ்சனம் பார்த்தல், பில்லி சூனியம், குறிபார்த்தல், அஞ்சனம் பார்த்தல், பில்லி சூனியம் நீக்கல், நீர்மந்திரித்தல் என்பவற்றின் மூலம் தீர்க்கமுடியாத பல நோய்களுக்கு தீர்வு வழங்கி வருகிறார்.

வளங்கள்

  • நூலக எண்: 8470 பக்கங்கள் 54