ஆளுமை:அருணாசல தேசிகர், காசிநாத சாஸ்திரியார்

From நூலகம்
Name அருணாசல தேசிகர்
Pages காசிநாத சாஸ்திரியார்
Pages சின்னப்பிள்ளை அம்மையார்
Birth 1888
Pages 1969
Place மட்டக்களப்பு
Category வைத்தியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலதேசிகர், காசிநாத சாஸ்திரியார் (1888 - 1969) மட்டக்களப்பைச் சேர்ந்த வைத்தியர். இவரது தந்தை காசிநாத சாஸ்திரியார்; தாய் சின்னப்பிள்ளை அம்மையார். பெற்றோரிடம் முதற்கல்வியைப் பெற்ற இவர், ஆரம்பக் கல்வியை ஆனைப்பந்திக் கோயில் திண்ணைப்பள்ளியில் தந்தையிடம் கற்றார். பின்னர் புளியந்தீவு மகிழடித் தெருவில் இருந்த சைவப் பள்ளியிலும், மட்டக்களப்பு அரசடியில் இருந்த மெதடிஸ்த மிஷன் பாடசாலையிலும் பயின்றார்.

இளமையில் திறமை வாய்ந்த மாணவராக விளங்கிய இவர், மட்டக்களப்பு அரசடி மெதடிஸ்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று ஆனைப்பந்தி பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் தலைமை ஆசிரியராக இருந்தார்.

மட்டக்களப்பு சைவசமயம் சார்பான சுதேச இயக்கத்தின் பங்காளராகி அழியும் நிலையில் சென்று கொண்டிருந்த இந்து சமயத்தை மீட்டு கிறிஸ்தவ சமயத்தவரின் மதமாற்ற நடவடிக்கைகளை எதிர்த்தார். மட்டக்களப்பின் புகழ்பெற்ற சொற்பொழிவாளராகத் திகழ்ந்ததோடு மட்டக்களப்பு மக்களிடையே ஆலய வழிபாட்டின் அவசியம், சைவப் பண்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியம் என்பவற்றை வலியுறுத்தி பல்வேறு பிரசங்கங்களை ஆற்றினார்.

தனது 60 வயதின் பின் நூல்களை எழுதுவதில் ஈடுபட்ட அருணாசல தேசிகர் சைவசமய ஆரம்ப போதினி, சைவசமய இளைஞர் போதினி, இந்து மாணவர் பக்திப் பாடல் பாமணி மாலை, சைவ இலக்கியக் கதாமஞ்சரி, சைவசமய சிந்தாமணி, சித்தாந்த சிரோன்மணி, மெய்ஞ்ஞான தீபம், சர்வஞானோத்தராகம சாரசங்கிரகம், அருட்பாத் திரட்டும் அரும்பெரும் பாக்களும், விநாயக மகத்துவ நுட்பமும் புளியநகர் ஸ்ரீ சித்திவிக்னேசுவர ஆலய மான்மியமும், முருகன் மகத்துவ நுட்பம் ஆகிய 12 நூல்களை எழுதியுள்ளார். இவை சைவ சமயக் களஞ்சியம் எனப்படுகின்றன.


வெளி இணைப்பு

Resources

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 117
  • நூலக எண்: 16946 பக்கங்கள் 47-48