ஆளுமை:அம்பிகை கஜேந்திரன்

From நூலகம்
Name அம்பிகை கஜேந்திரன் [பஞ்சலிங்கம்]
Pages பஞ்சலிங்கம்
Pages பங்கஜமலர்
Birth 1993.01.12
Place கோண்டாவில்
Category சட்டத்தரணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகை கஜேந்திரன் [பஞ்சலிங்கம்] (1993.01.12) யாழ்ப்பாணம், கோண்டாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட சட்டத்தரணி, எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், பேச்சாளார். இவரது தந்தை பஞ்சலிங்கம்; தாய் பங்கஜமலர். யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திலும், யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்றுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பயின்று தனது சட்டமாணி பட்டத்தை பெற்றவர். சட்டத்தரணியாக பணியாற்றுகிறார். சங்க இலக்கியம், நவீன தமிழ் இலக்கியம், கோவில் வர்ணனைகள், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு, சட்டரீதியான விழிப்புண்ர்வு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறார். யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தின் பதிப்பாசிரியாராக 2018 காலப்பகுதியில் பதவிவகித்தார். சட்டத்துறை சார்ந்த பல கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். இலங்கை சட்ட கல்லூரியின் இந்து மகாசபை வெளியிடும் நக்கீரம், யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட மாணவர் சங்கத்தின் நீதம், மல்லாகம் சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்ட பருவ இதழ், உட்பட பல சஞ்சிகைகளுக்கும் வலம்புரி பத்திரிகை, வீரகேசரி, தமிழ் நாதம், போன்ற பத்திரிகைகளில் சட்டத்தையும் திருக்குறளையும் ஒப்பீட்டு பல கட்டுரைகளை அம்பிகை அவர்கள் எழுதியுள்ளார். செல்லமுத்து வெளியீட்டகத்தின் ஆயிரம் கவிஞர்கள் ஆயிரம் கவிதைகள் எனும் நூலிலும், இந்தியாவின் அனைத்துலக தமிழ் மாமன்றத்தின் வெளியீடான இளைய தலைமுறையின் எழுச்சி எனும் நூலிலும், பஞ்சகலசம் எனும் நூலிலும் தனது கவிதைகளை எழுதியுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மானுடம் ஆய்வு மாநாட்டின் பேரூந்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகள் பற்றிய ஆய்வு கட்டுரையை வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தனது சட்டமாணி கற்கைக்கான ஆய்வுக்கட்டுரையாக மிருக பலியிடல் தொடர்பான சமய நம்பிக்கைகளில் சட்டத்தின் வகிபாகம் எனும் ஆய்வு கட்டுரையை சமர்ப்பித்தார்.சாகித்திய வீணாலய கீதத்தை இவரே எழுதினார். நல்லூர் பிரதேசசபையால் 2022ம் ஆண்டிற்கான இலக்கியத்திற்கான சாதனைப்பெண் விருது 2022ம் ஆண்டு மகளிர் தினத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.

இவற்றையும் பார்க்கவும்