ஆளுமை:அம்பிகை, ஜீவேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:12, 13 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அம்பிகை
தந்தை குமரகுருநாதன்
தாய் மதனராணி
பிறப்பு 1976.08.25
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பிகை, ஜீவேஸ்வரன் (1976.08.25) யாழ்ப்பாணம் மூளாயில் பிறந்த கலைஞர். இவரது தந்தை குமரகுருநாதன்; தாய் மதனராணி. ஆரம்பக் கல்வியை யா/மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலையிலும் இடைநிலை, உயர் கல்வியை யா/விக்டோரியா கல்லூரியிலும் கற்றார். 2006ஆம் ஆண்டு நாடகத்துறையில் பிரவேசித்துள்ளார் அம்பிகை. குறும்படம், திரைப்படங்கள் என மொத்தமாக 42 படங்களில் நடித்துள்ளதோடு மூன்று விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார் நடிகை அம்பிகை. சமூகசேவையாளர், அரசியல்வாதி என தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார் இந்தப் பெண் ஆளுமை. இவர் மாதர்சங்கத் தலைவியாகவும் சிவில் பாதுகாப்புக்குழு அங்கத்தவராகவும் உள்ளதோடு தேர்தலில் போட்டியிட்டுள்ளார். பெரும்பாலான படங்களில் துணை நடிகையாக நடித்து வருகிறார். சினம்கொள் என்னும் இந்தியத் திரைப்படத்திலும் துணை நடிகையாக நடித்துள்ளார். பனைமரக்காடு, நெருஞ்சிமுள், ஆறாவது நிலம், யாழ்தேவி, மத்தியச் சிறைச்சாலை, ஒருவன் ஆகியென இவர் நடித்த ஏனைய படங்களாகும்.

விருது

மாசறு – 40 நிமிடப் படம் சிறந்த துணை நடிகைக்கான விருது.

குறிப்பு : மேற்படி பதிவு அம்பிகை, ஜீவேஸ்வரன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.