ஆளுமை:அம்பலவாணர், வேலுப்பிள்ளை

From நூலகம்
Name அம்பலவாணர்
Pages வேலுப்பிள்ளை
Pages செல்லம்மா
Birth 1927.10.11
Pages 1981.01.19
Place வண்ணார்பண்ணை
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அம்பலவாணர், வேலுப்பிள்ளை (1927.10.11 - 1981.01.09) யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை வேலுப்பிள்ளை; தாய் செல்லம்மா. யாழ்ப்பாணம் இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயின்ற இவர் தனது மரபு வழித் தொழிலான பொன்னாபரணம் தயாரிக்கும் தொழிலைச் செய்து வந்தார். இவர் வாழ்ந்த பிரதேசத்தின் இசையறிவு இவரையும் மிருதங்கை இசையை கற்கத் தூண்டியது.

அரம்பத்தில் மிருதங்க இசையை ஆவரங்கால் பொன்னுசாமியிடமும் பின்னர் இந்திய நாட்டுக் கலைஞர் கோவிந்தப்பிள்ளை, பல்லிய வித்துவான் சுப்பையாபிள்ளை, சிதம்பரம் ஏ. எஸ். இராமநாதன் ஆகியோரிடம் கற்றார். பிற்காலத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தின் நன்கறியப்பட்ட வித்துவானாக இவர் திகழ்ந்தார். யாழ். ரசிக ரஞ்சன சபாவில் இருபத்தெட்டு ஆண்டுகள் மிருதங்க இசையை மாணவர்களுக்குப் போதித்து வந்த இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன மிருதங்கக் கலைஞராகவும் பணி புரிந்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 88
  • நூலக எண்: 7474 பக்கங்கள் 68-72