ஆளுமை:அனுசூயா, பிறைற்

From நூலகம்
Name அனுசூயா
Pages அண்ணாமலை
Pages முத்து ரெட்ணம்
Birth 1951.06.18
Place மட்டக்களப்பு
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அனுசூயா, பிறைற் மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த பெண் இசைக்கலைஞர். இவரது தந்தை அண்ணாமலை; தாய் முத்து ரெட்ணம். பதுளையில் வைத்திய அதிகாரியாகக் கடமை புரிந்த பிறைற்றை திருமணம் முடித்தார். இரு பெண்களுக்கு தாயாவார்.

ஆரம்ப இடைநிலை உயர்க் கல்வியை மட்டக்களப்பு வின்சன்ற் மகளிர் உயர்தரப் பாடசாலையில் கற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் இசை நடனக் கல்லூரியில் திருவாளர் கல்யாண கிருஷ்ண பகவதரிடமும் திரு.கனகசுந்தரம் ஐயர், திருமதி யோகநாயகி தணிகாசலம் ஆகியோரிடம் இசை பயின்றார். வீணை இசையில் டிப்ளோமா பட்டம் பெற்றுள்ளார். மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா இசை நடனக் கல்லூரியில் 1998ஆம் ஆண்டு வீணை ஆசிரியராக கடமையாற்றினார். சில காலங்களின் பின் இக் கல்லூரி கிழக்குப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த போது மேற்படிப்பை மேற்கொள்ள வேண்டியதால் மீண்டும் யாழ் பல்கலைக்கழகத்தில் வீணை இசையை கற்ற இசைமாணி பட்டத்தை பெற்றார். சுவாமி விபுலானந்தா பல்கலைக்கழகத்தில் வீணை விரிவுரையாளராக இணைந்து கடமையாற்றினார்.அக்கால கட்டத்தில் பல வீணை நிகழ்ச்சிகளில் பங்கு பற்றியதோடு நாட்டிய நிகழ்வுகள், நாட்டிய நாடகங்களில் பக்க வாத்தியமாக வீணை இசையில் திறமையை வெளிப்படுத்தினார். இவர் பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இவர் ஓய்வு பெற்ற பின்னரும் சுவாமி விலானந்தா பல்கலைக்கழகத்தில் பகுதிநேர விரிவுரையாளராகக் கடமையாற்றி வருகிறார்.

விருதுகள்

தேனக கலைச்சுடர் விருது -மண்முனை வடக்கு கலாசாரப் பேரவை

குறிப்பு மேற்படி பதிவு அனுசூயா, பிறைற் அவர்களின் தகவலை அடிப்படையாகக் கொண்டது.