ஆளுமை:அனஸ், எம். என். எம்.

From நூலகம்
Name இளைய அப்துல்லாஹ்
Pages மொஹமட் நவாஸ்
Pages ஹப்ஸா
Birth 1968.05.21
Place முல்லைத்தீவு, புளியங்குளம்
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அனஸ், எம். என். எம். (1968.05.21 - ) முல்லைத்தீவு, புளியங்குளம், ஒட்டிசுட்டானைப் பிறப்பிடமாகவும் இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர், ஊடகவியலாளர், தொலைக்காட்சி அறிவிப்பாளர், தயாரிப்பாளர். இளைய அப்துல்லாஹ் என்ற புனைபெயரால் நன்கறியப்படுகிறார். இவரது தந்தை மொஹமட் நவாஸ்; தாய் ஹப்ஸா. 1990களில் இலங்கை வானொலியில் பணியாற்றினார். 2000 இல் இலண்டன் தீபம் தொலைக்காட்சியில் இணைந்து செய்திவாசிப்பு, அறிவிப்பு, நிகழ்ச்சித் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார். பின்னர் ஐபிசி தமிழ் தொலைக்காட்சியில் இணைந்தார்.

1984 இல் எழுதத் தொடங்கிய இவர் சிறுகதைகள், இலக்கியக்கட்டுரைகள், கவிதைகளை எழுதிவருகிறார். இளைய அப்துல்லாஹ், ஹரீரா அனஸ், மானுட புத்ரன் போன்ற புனைபெயர்களில் எழுதும் இவரது படைப்புக்கள் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை, அம்ருதா முதலான சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. 75 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 300 இற்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.

துப்பாக்கிகளின் காலம், பிணம் செய்யும் தேசம், அண்ணை நான் தற்கொலை செய்யப் போகிறேன், கடவுளின் நிலம், லண்டன் உங்களை வரவேற்பதில்லை, நீரில் விளக்கெரியும் நந்திக்கடல் போன்றவை இவரது நூல்கள். 2005 ஆம் ஆண்டுக்கான சாகித்திய மண்டலப் பரிசு, 2006 ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் சிறந்த பக்தி எழுத்தாளருக்கான பி. ஏ. சிறீவர்த்தன விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


Resources

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 78-82
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 202-204