ஆளுமை:அதிரூபசிங்கம், ஆ

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:31, 19 சூலை 2020 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=அதிரூபசிங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அதிரூபசிங்கம்
தந்தை ஆறுமுகம்
பிறப்பு 1938.08.24
இறப்பு 2017.07.06
ஊர் யாழ்ப்பாணம் வல்வட்டித்துறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அதிரூபசிங்கம், ஆ (1938.08.24) யாழ்ப்பாணம் வல்வையில் பிறந்த ஆளுமை. இவரது தந்தை ஆறுமுகம்; ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், அறிவிப்பாளர், நாடகக் கலைஞர், மல்யுத்த வீரர், சமூக சேவையாளர் என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர். இலங்கை அரச போக்குவரத்து சபையின் நடத்துனராக தனது தொழிலை ஆரம்பித்த இவர் பிரதி தலைமை அதிகாரியாக பருத்தித்துறை போக்குவரத்து சபையில் கடமையாற்றி 1990இல் இளைப்பாறினார்.

வெளியாரியாக தனது கல்வியைத் தொடர்ந்து தமிழ் மற்றும் இந்து நாகரீகத்தில் பட்டம் பெற்றார். வல்வையில் இரவு பாடசாலை உருவாகத்தின் ஒருவராவார். வல்வை கல்வி மன்றத்தில் ஆசிரியராக கடமையாற்றினார். 40 ஆண்டுகளாக ஆசிரியர் தொழில் ஈடுபட்டு வந்தார். மாஸ்டர் என அழைக்கப்பட்டு வந்த அதிரூபசிங்கம்.

அலை ஒளி கையெழுத்து சஞ்சிகையின் ஆசிரியராகவும் ஆறுமுகபாலன் இவன் ஆற்றங்கரை வேலன் என்ற நூலையும் வெளியிட்டார். வல்வை முன்னோடிகள் என்னும் பெயரில் 70களில் நாடக குழு பல நாடகங்களை இயக்கிய நடித்துள்ளார். இவரின் நாடகங்களான ”படையா கொடையா”, அந்தக் குழந்தை, மகனே கண் போன்ற நாடகங்கள் பெரிதும் பிரபலமான நாடகங்கள். 96ஆம் ஆண்டு வன்னிக்கு இடம்பெயர்ந்து விஸ்வமடு பாரதி வித்தியாலயத்தில் ஆங்கில ஆசிரியராகக் கடமையாற்றினார். மிகச்சிறந்த பேச்சாளரான இவர் மேடைப் பேச்சுக்களிலும் பட்டிமன்றங்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

வல்வை ரேவடி விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகரான இவ ர் அக்கழகத்தின் தலைவராகவும் உறுப்பினராகவும் சுமார் 50 ஆண்டுகளாக இருந்துள்ளார். சிறந்த மல்யுத்த வீரருமான இவர் கம்பாட்டம் மற்றும் ஆசனங்கள் சிலவற்றையும் பயிற்றுள்ளார். 1970ஆம் ஆண்டு காலப் பகுதியில் தமிழரசுக்கட்சியுடன் இணைந்து தீவிர அரசியலிலும் ஈடுபட்டார்.

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:அதிரூபசிங்கம்,_ஆ&oldid=392747" இருந்து மீள்விக்கப்பட்டது