ஆளுமை:நவயுகா, இராஜ்குமார்

நூலகம் இல் இருந்து
Hamsa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:44, 13 ஏப்ரல் 2020 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நவயுகா
தந்தை குகராஜா
தாய் தர்மலீலா
பிறப்பு
ஊர் யாழ்ப்பாணம், தெள்ளிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நவயுகா, இராஜ்குமார் யாழ்ப்பணம், தெள்ளிப்பளையில் பிறந்த பெண் கலைஞர். ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் இராமநாதன் கல்லூரியிலும் தொடர்ந்து வவுனியா இறம்பைக்குளம் மகளிர் மகாவித்தியாலத்திலும் கற்றார். இந்தியா காமராஜர் பல்கலைக்கழகத்தின் வணிகப் பட்டதாரியாவார். தொழில்நுட்பத்துறையில் ஆசிரிய டிப்ளோமா முடித்துள்ள நவயுகா மும்மொழி தேர்ச்சி பெற்றவர்.

பாடசாலைக் காலத்தில் இருந்தே நாடகம், இசைநாடகம், நாட்டுக்கூத்து கலைத்துறையில் ஈடுபாடுடைய நவயுகா எழுத்தாளராகவே ஆரம்பத்தில் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார். 10க்கும் மேற்பட்ட பாடல்களையும் இவர் எழுதியுள்ளார. இலங்கைப் பெண்கள் நடிப்புத்துறையில் தங்களை நிலைநிறுத்திக்கொள்ளத் தயங்கும் ஒரு சூழலில் நவயுக நடிப்புத்துறையை பிரதானமாக கொண்டுள்ளார். இவர் ஒரு நடிகையாக குறுந்திரைப்படம் ஊடாகவே பிரவேசித்துள்ளார். ஆறாம் நிலம், ஒற்றை பனை மரம் ஆகிய திரைப்படங்களில் பிரதான கதாபாத்திரத்திலும், கோமாளிகிங்ஸ் திரைப்படத்தில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இதில் ஒற்றைப்பனைமரம் பல விருதுகைளை வென்றுள்ளது. கிரிவெசிபுர என்னும் சிங்கள திரைப்படத்திலும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் இலங்கையின் பெரிய பட்ஜட் திரைப்படம் அத்துடன் இப்படத்தில் மும்மொழியும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது முக்கியமான வரலாற்றுப்படமுமாகும். The Frozen Fire – (Director Anuruddha Jayasinghe) எனும் திரைப்படத்திற்கான தமிழ் உபதலைப்புக்களை இவரே செய்துள்ளார். மாசறு, வினவு ஆகிய இரு குறுந்திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். இப்படங்கள் பாலியல் சுரண்டல்களைப் பற்றிப் பேசும் படங்களாகும்.

உயிர் உடையும் ஓசைகள், எனும் கவிதைப் புத்தகத்தை எழுதியுள்ளார். இப்புத்தகததை 2010 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். மன்மதம் நீ எனும் கவிதைப் புத்தகத்தை வெகுவிரைவில் வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கின்றார் நவயுகா.

குறிப்பு : மேற்படி பதிவு நவயுகா, இராஜ்குமார் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வளங்கள்

  • நூலக எண்: 8346 பக்கங்கள் 6
  • நூலக எண்: 8564 பக்கங்கள் 28

வெளி இணைப்புக்கள்