ஆளுமை:யோகவதி, றொபட் ஐவன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யோகவதி
தந்தை யோகராஜா
தாய் சத்தியவதி
பிறப்பு 1976.11.12
ஊர் கிளிநொச்சி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

யோகவதி, றொபட் ஐவன் (1976.11.12) கிளிநொச்சியில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை யோகராஜா; தாய் சத்தியவதி. கொற்றவை, தமிழ்மதி, மதுரா, அறிவழகன் போன்ற புனைபெயர்களில் தன்னை அடையாளப்படுத்துகிறார். ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கிளிநொச்சி புனித திரேசா மகளிர் கல்லூரியில் கற்றார். ஊடகவியல்துறைசார் பல பயிற்சிகளை பெற்றுள்ளார். தனது 22ஆவது வயதில் ஊடகத்துறைக்குள் நுழைந்துள்ளார் கொற்றவை. ஊடகவியலாளர் கொற்றவை என்ற புனைபெயரினாலேயே எல்லோராலும் அறியப்படுகிறார்.தற்பொழுது தமிழ்குரல் வானொலியின் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் நிகழ்ச்சி தயாரிப்பாளராகவும் கடமையாற்றி வருகிறார். அனலை எவ்எம், சங்கமம் ஆகிய வானொலிகளிலும் இவர் கடமையாற்றியுள்ளார்.

புலிகளின் குரல் வானொலியின் ஊடாக ஊடகத்துறையில் பிரவேசித்த இவர் இவ் வானொலியில் செய்திவாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் இருந்துள்ளார். நாடகப் பிரதியாக்கம், கவிதை, கட்டுரை எழுதுதல் வானொலி நாடகம் நடித்தல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவர் நடித்த நாடகங்களில் ”பாதை” தொடர் நாடகம் குறிப்பிடத்தக்கது.

விருது

எழுதாரகை விருது – தமிழரசுக் கட்சியின் மகளிர் அமைப்பு.

குறிப்பு : மேற்படி பதிவு கொற்றவை அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.


வெளி இணைப்புக்கள்