வலைவாசல்:அம்பாறை ஆவணகம்/அறிமுகம்
நூலகம் இல் இருந்து
Keerthika Velu (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:59, 22 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
வரலாற்றுக்காலத்தில் அம்பாறை மாவட்டம், உரோகணப் பகுதியுடன் இணைந்து காணப்பட்டது. பத்தாம் நூற்றாண்டுக்குப் பின், இன்றைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உருவாகிய முக்குவர் வன்னிமைகள், மட்டக்களப்புத் தேசத்தின் நிர்வாகத்தில் முக்கிய பங்காற்றின. இன்றைய சம்மாந்துறையே அன்றைய மட்டக்களப்புத் தேசத்தின் தலைநகராக விளங்கியது. திருக்கோவில் முருகன் கோயில், கிழக்கின் தேசத்துக்கோவில்களில் முதன்மையானதாக திகழ்ந்தது. கண்டியின் செனரத் மன்னன் காலத்தில் குடியேற்றப்பட்டதாகச் சொல்லப்படும் சோனகர், இன்றைய அம்பாறை மாவட்டத்திலேயே குடியேறினர். இவ்வாறான பழமை வாய்ந்த வரலாறினைக் கொண்ட அம்பாறை மாவட்டத்தின் சிறப்பியல்புகளை ஆவணப்படுத்தல் அவசியமாகும்.
| நூல்கள்: 456 | மலர்கள்: 58 | பிரசுரங்கள்: 56 | ஆளுமைகள்: 57 | நினைவுமலர்கள்: 21 | இதழ்கள்: 7 | ஒளிப்படம்: 116 | வாய்மொழி வரலாறு : 22 | குறுங்கால ஆவணங்கள் : 463 |