ஆளுமை:செல்லத்துரை, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Kajenthini Siva (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:05, 1 நவம்பர் 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை
தந்தை சுப்பிரமணியம்
தாய் தங்கமுத்து
பிறப்பு 1909
இறப்பு 1968
ஊர் குப்பிளான்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, சுப்பிரமணியம் (1909- 1968) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம்; இவரது தாய் தங்கமுத்து. சங்கானை நாகலிங்க சுவாமிகளிடம் பண்ணிசையினைப் பயின்ற இவர், மேற்படிப்புக்காக மலேசியா சென்று தொடர்ந்தும் பண்ணிசையைப் பயின்று இந்தியாவில் திருவையாறு தேவாரப் பாடசாலையில் தேவார இசையினைப் பயின்றார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றார்.

இலங்கையின் பல பாகங்களிலும் பண்ணிசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ள இவர், சமய நாடகங்களையும் தயாரித்தார். இவற்றுள் சிறுதொண்டர், சாவித்திரி சத்தியவான், வேதாள உலகம், மார்க்கண்டேயர் போன்றவை சிறப்பானவைகளாகும். இதனால் இவருக்குச் சிறுதொண்டர் என்னும் பட்டப்பெயரும் வழங்கப்படலாயிற்று. தூத்துக்குடியில் நடைபெற்ற திருமுறை விழாவில் இவருக்குத் தங்கப்பதக்கமும் இசைவல்லார் என்னும் பட்டமும் கிடைக்கப்பெற்றது.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 116-118