வன்னி மான்மியம்

From நூலகம்
வன்னி மான்மியம்
28.JPG
Noolaham No. 28
Author நிலாந்தன், மகாலிங்கம்
Category தமிழ்க் கவிதைகள்
Language தமிழ்
Publisher நியதி
Edition 2002
Pages viii + 66

To Read


Book Description

மண் பட்டினங்கள், பாலியம்மன் பள்ளு அல்லது ஓயாத அலைகள் 3, வன்னி நாச்சியாரின் சாபம், மடுவுக்குப் போதல் ஆகிய நான்கு பரிசோதனைக் கதைகளின் தொகுப்பு. மண்பட்டினங்கள், தமிழர்களின் பூர்வீகத்தை அடிநாதமாகக் கொண்டு அவர் தம் எழுச்சியையும் வீழ்ச்சியையும் உட்கொண்ட தொடர்வரலாறு. மற்றைய மூன்றும் வன்னியின் வேர்களை ஊடுருவி வரலாற்றுச் சம்பவங்களையும் ஐதீகங்களையும் நிகழ்காலச் சம்பவங்களுடன் இணைப்பதன் மூலமான பேசுகையாக அமைந்தவை. பின்னுரையாக நிலாந்தனின் படைப்புக்கள் பற்றிய மு.திருநாவுக்கரசு, கருணாகரன் ஆகியோரின் மதிப்பீடுகளும் இடம்பெற்றுள்ளன.


பதிப்பு விபரம் வன்னி மான்மியம்: நான்கு பரிசோதனைக் கதைகள். நிலாந்தன். மல்லாவி: நியதி, 361, 4ம் யுனிட்;, திருநகர், மல்லாவி, 1வது பதிப்பு, ஐனவரி 2002. (ஸ்கந்தபுரம்: கன்னிநிலம் பதிப்பகம்). viii + 66 பக்கம், விலை: ரூபா 100. அளவு: 21*14 சமீ.

-நூல் தேட்டம் (# 1689)