பகுப்பு:ஜீவநதி

From நூலகம்
10202.JPG

'ஜீவநதி' யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் கலை இலக்கிய மாத இதழ் ஆகும். 2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் இரு மாத இதழாக ஆரம்பிக்கப்பட்டு 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக தொடர்ச்சியாக வெளிவருகின்றது. மூத்த எழுத்தாளர்களினதும் இளைய தலைமுறையினரதும் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கலை இலக்கிய நிகழ்வுகள், அரங்குசார் ஆய்வுக்குறிப்புகள், நூல்மதிப்புரைகள், நூல் அறிமுகங்கள் முதலிய பல உள்ளடக்கங்களைக் கொண்டு பிரசுரமாகின்றது.

2012இல் ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சஞ்சிகைக்கான 'சின்னப்ப பாரதிவிருது', சிறந்த சிற்றிதழுக்கான 'இனிய மணா இலக்கிய விருது' முதலிய விருதுகளை இந்தியாவில் பெற்றுக்கொண்டது. உளவியல் சிறப்பிதழ், சிறுகதைச் சிறப்பிதழ், பெண்ணியச் சிறப்பிதழ், இரண்டு கவிதைச் சிறப்பிதழ்கள், இளம் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ், கே.எஸ். சிவகுமாரன் சிறப்பிதழ், சட்டநாதன் சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் சிறப்பிதழ், கனடாச் சிறப்பிதழ், மலையகச் சிறப்பிதழ், திருகோணமலைச் சிறப்பிதழ், பொங்கல் சிறப்பிதழ் முதலிய பல சிறப்பிதழ்களும் இதுவரை வெளிவந்துள்ளன. இதனைவிட ஒவ்வொரு ஆண்டும் ஓர் ஆண்டிதழ் வெளிவருக்கின்றது.

ஜீவநதி இதழின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன், 'கடல்' எனும் கல்வியியல், உளவியல், சமூகவியலுக்கான சிற்றிதழினதும் பிரதம ஆசிரியர் ஆவார். இவர் மீண்டும் துளிர்ப்போம் (சிறுகதை), இலக்கியமும் எதிர்காலமும் (கட்டுரை), உளவியல் பிரிவுகள் ஒரு அறிமுகம் (உளவியல்) முதலிய நூல்களை எழுதியுள்ளதுடன் பல நூல்களைத் தொகுத்தும் வெளியிட்டுள்ளார். இவரது ஜீவநதி வெளியீட்டின் ஊடாக 50 க்கும் அதிக நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன.


தொடர்புகளுக்கு:- கலை அகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய். T.P:-0094-77-5991949, 0094-21-2262225 E-mail:-jeevanathy@yahoo.com

Pages in category "ஜீவநதி"

The following 200 pages are in this category, out of 212 total.

(previous page) (next page)

(previous page) (next page)