ஆளுமை:செசிலியா, எஸ்.யூ

From நூலகம்
Name செசிலியா
Birth 1954.11.08
Place சம்மாந்துறை
Category எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செசிலியா, எஸ்.யூ சம்மாந்துறையில் பிறந்த எழுத்தாளர். சலமோன் உத்திரியம்மாள் செசிலியா என்னும் பெயரைகொண்டவர். வீரமுனை ராமகிருஷ்ண சங்க தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்றார். தனது 5ஆம் வகுப்பில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டவராகக் காணப்பட்டார் செசிலியா. நாடகம், நடனம், பாடல், நாட்டாரியல், கவிதை எழுதுதல் என பன்முகத்திறமைகளைக் கொண்டவர். இவரால் தயாரிக்கப்பட்ட பல நாடகங்களை மாணவர்களின் ஊடாகவே மேடையேற்றியுள்ளார். கவிதைத்துறையில் மிகவும் ஈடுபாடு கொண்ட எழுத்தாளரின் பல கவிதைகள் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளன. கரையைத் தேடு எனும் கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கோயில், திருவிழாக்கள், கலாமன்றங்கள் ஊடாக இவரின் சமூக நாடங்கள், புராண நாடகங்கள் மேடையேற்றப்பட்டுள்ளன. ஹரிசந்திரா, அன்பைத்தேடி புராண நாடகமும் சந்தேகம் என்னும் அரச நாடகமும் குறிப்பிடத்தக்கது. விடிவு வருமா எனும் சமூக நாடகம் போட்டிகளில் கலந்து வெற்றிப் பெற்றுள்ளமை விசேட அம்சமாகும்.

படைப்புகள்

  • கரையைத் தேடு (கவிதைத் தொகுதி)