"ஆளுமை:சுபாஷினி, பிரணவன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 19: வரிசை 19:
  
 
யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபை இவருக்கு நாடகமும் அரங்கியலும்,  வீணை ஆகிய துறைகளுக்கு கலாவித்தகர் பட்டத்தை வழங்கியுள்ளது
 
யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபை இவருக்கு நாடகமும் அரங்கியலும்,  வீணை ஆகிய துறைகளுக்கு கலாவித்தகர் பட்டத்தை வழங்கியுள்ளது
 +
 +
குறிப்பு : மேற்படி பதிவு சுபாஷினி, பிரணவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==

01:39, 10 செப்டம்பர் 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சுபாஷினி
தந்தை ஜெகநாதன்
தாய் நாகரத்தினம்
பிறப்பு 1979.07.09
ஊர் அச்சுவேலி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சுபாஷினி, பிரணவன் யாழ்ப்பாணம் அச்சுவேலியில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஜெகநாதன்; தாய் நாகரத்தினம். ஆரம்பக் கல்வியை அச்சுவேலி மத்திய கல்லூரியிலும் இடைநிலை, உயர் நிலைக் கல்வியை சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும் கல்வி கற்றார். யாழ் பல்கலைக்கழகத்தில் வீணை சிறப்பு நுண்கலைமாணிப் பட்டம் பெற்றுள்ள எழுத்தாளர் யாழ்ப்பாண திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் கல்வி டிப்ளோமாவையும் முடித்துள்ளார். வாய்ப்பாட்டில் ஆசிரியர் தரம் வரை பெற்றுள்ளார். யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபை இவருக்கு நாடகமும் அரங்கியலும், வீணை ஆகிய துறைகளுக்கு கலாவித்தகர் பட்டத்தை வழங்கியுள்ளது.

கவிதை எழுதுதல், நாடகப் பிரதியாக்கம் எழுதுதல், நாடக நெறியாள்கை என பன்முகத்திறமைகளைக் கொண்டவர் சுபாஷினி. நாடகப் பிரதியாக்கம், நெறியாள்கை என்பனவற்றை 1996ஆம் ஆண்டு முதல் செய்து வருகிறார். 22 இற்கும் மேற்பட்ட நாடகங்களை பிரதியாக்கம் செய்து மேடையேற்றியுள்ளதாகத் தெரிவிக்கின்றார். தமிழ்த்தாய் வாழ்த்தை இவரே எழுதி மெட்டமைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். கொழும்பு இராமநாதன் கல்லூரியின் கணித மன்ற கீதம், நூலக மன்ற கீதம் அத்துடன் நல்லூரில் சாரங்கா இசை மன்றம், கொழும்பு நடேஸ்வராலயம் கலைக்கல்லூரி மன்றங்களுக்கான மன்ற கீதங்களையும் இவர் எழுதியுள்ளார். பகிர்வு எனும் இவரின் கவிதைத் தொகுதியொன்றை 2006ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அத்துடன் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு குமுறல் 2014ஆம்ஆண்டு வெளியிடப்பட்டது. காசநோய் தொடர்பான ஏற்கனவே எழுதப்பட்ட பாடலுக்கு இவர் மெட்டமைத்து இசையமைத்துள்ளதாகத் தெரிவிக்கின்றார். கைகழுவும் தினத்திற்கு துரைசிங்கம் எழுதிய பாடலுக்கு இவர் மெட்டமைத்து இசையமைத்துள்ளார்.

விருதுகள்

சாதனைப் பெண் விருதை நந்தவனம் பவுண்டேசன் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் வட இலங்கை சங்கீத சபை இவருக்கு நாடகமும் அரங்கியலும், வீணை ஆகிய துறைகளுக்கு கலாவித்தகர் பட்டத்தை வழங்கியுள்ளது

குறிப்பு : மேற்படி பதிவு சுபாஷினி, பிரணவன் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்