"ஆளுமை:சர்மிலா வினோதினி, திருநாவுக்கரசு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
வரிசை 1: வரிசை 1:
{{ஆளுமை1|
+
{{ஆளுமை|
 
பெயர்=சர்மிலா|
 
பெயர்=சர்மிலா|
 
தந்தை=திருநாவுக்கரசு|
 
தந்தை=திருநாவுக்கரசு|

01:35, 4 சூலை 2019 இல் கடைசித் திருத்தம்

பெயர் சர்மிலா
தந்தை திருநாவுக்கரசு
தாய் செல்வரதி
பிறப்பு 1985.06.08
ஊர் மன்னார்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சர்மிலா வினோதினி, திருநாவுக்கரசு (1985.06.08) கிளிநொச்சி மாவட்டத்தின் வேரவில் பூநகரியில் பிறந்த எழுத்தாளர். தற்பொழுது மன்னாரை வசிப்பிடமாகக் கொண்டுள்ளார். வேரவில இந்து வித்தியாலயம், நுணாவில் அமிர்தாம்பிகை வித்தியாலயம், இலுப்பைக்கடவை மகாவித்தியாலயம், சாவகச்சேரி இந்துக்கல்லூரி, மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியல் சிறப்புப்பட்டதாரியாவார். கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் காட்டியலும் சுற்றுச்சூழல் முகாமைத்துவமும் துறையில் முது விஞ்ஞானமாணி கற்கையைத் தொடர்ந்து கற்றுவருகிறார் எழுத்தாளர். இடர்முகாமைத்துவம், சமூக, உளவியலும், ஆற்றுப்படுத்தலும், ஊடகத்துறை மற்றும் அறிவிப்புத்துறை சார் நுட்பங்களும் ஆகிய துறைகளில் பட்டய நெறியினையும் நிறைவு செய்துள்ளார். பாடசாடலைக் காலம் முதல் கலைகளில் ஈடுபாடுடையவராகத் திகழ்ந்துள்ளதுடன் கவிதை, சிறுகதை ஆகிய துறைகளில் இயங்கி வருகிறார். இவரது படைப்புக்கள் ஜீவநதி, பொக்சிசம், மன்னல், மன்னார், குடதிசை, முழக்கம், ஆனந்தவிகடன், காக்கைச்சிறகினிலே, பூவரசி, கதைசொல்லி போன்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சஞ்சிகைகள் இணையத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. இவருடைய படைப்புக்களாக மன்னார் தமிழச்சங்கத்தின் வெளியீடாக இராப்பாடிகளின் நாட்குறிப்பு (2016) என்கிற கவிதை நூலும், தமிழ்நாடு பூவரசி பதிப்பகத்தினுடைய வெளியீடாக மொட்டைப்பனையும் முகமாலைக்காத்தும் (2019) என்கின்ற சிறுகதை நூலும் வெளிவந்துள்ளன. மன்னார் மாவட்ட செயலக வெளியீடான மலரும் மன்னார் என்கின்ற ஆவணப்படத்தினையும் இயக்கியுள்ளார். இலங்கை கலாசார அலுவல்கள் திணைக்களம், வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றினால் நடாத்தப்பட்ட தேசிய ரீதியிலான போட்டிகளில் சிறுகதை, கவிதை மற்றும் பாடலாக்கம் போன்றவற்றில் வெற்றியீட்டி பரிசில்களும் சான்றிதழ்களும் பெற்றுள்ளதுடன் சிறுகதைத்துறைக்கான விருதினையும் பெற்றுள்ளார். டயலொக் அக்சியாட்டம் நிறுவனம், மன்னார் மாவட்ட செயலகத்தின் மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் அலுவலகம் ஆகியவற்றில் கடமையாற்றிய இவர் ஐபிசி லங்கா ஊடக நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்புப் பிரிவில் கடமை புரிவதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு சர்மிலா வினோதினி, திருநாவுக்கரசு அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

வெளி இணைப்புக்கள்