ஆளுமை:அருளானந்தம், அந்தோணிப்பிள்ளை

From நூலகம்
Name அருளானந்தம்
Pages அந்தோணிப்பிள்ளை
Birth 1948.07.13
Place மாரீசன் கூடல்
Category கலைஞர்

அருளானந்தம், அந்தோணிப்பிள்ளை (1948.07.13 - ) யாழ்ப்பாணம், மாரீசன்கூடலைச் சேர்ந்த நாடகக்கலைஞர். இவரது தந்தை அந்தோணிப்பிள்ளை. நாடகம், நாட்டுக்கூத்து போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவர் 1966 இல் தனது கலைச் செயற்பாடுகளை ஆரம்பித்தார்.

அனேகமாகப் பெண்பாத்திரம் ஏற்று நடித்துள்ள இவர் சகோதரபாசம், அரிச்சந்திரா, புரட்சித்துறவி, உத்தரியத்தின் மகிமை போன்ற பல நாட்டுக்கூத்துக்களிலும் அடிமைப்பெண், காதல் படுத்தும்பாடு, இறைவன் இட்ட கட்டளை, தியாகச் செம்மல் ஆகிய நாடகங்களிலும் நடித்துள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 125-126