ஆளுமை:அருளம்பல சுவாமிகள், இராமநாதர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருளம்பல சுவாமிகள்
தந்தை இராமநாதர்
தாய் சின்னாச்சிப்பிள்ளை
பிறப்பு 1865
ஊர் வண்ணார்பண்ணை
வகை சித்தர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருளம்பல சுவாமிகள், இராமநாதர் (1865 - ) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த ஈழத்துச் சித்தர்களுள் ஒருவராவார். இவரது தந்தை இராமநாதர்; தாய் சின்னாச்சிப்பிள்ளை. இவர் குழந்தைவேற் சுவாமிகளைக் குருவாகக் கொண்டவர். இவர் மெற்ரிக்குலேசன் பரீட்சையில் சித்தியடைந்து இளம்வயதில் அரசாங்க உத்தியோகத்தரானார். பகுத்தறிவுவாதிகள் சங்கம், சுத்ததர்ம மண்டலம் ஆகியவற்றின் அங்கத்தவராகவும் விளங்கினார். இவர் கடவுள், உயிர், உலகம் என்பவற்றை ஆராய்ந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 961 பக்கங்கள் 46-52