ஆளுமை:அரச இரத்தினம், சின்னப்பு

From நூலகம்
Revision as of 02:29, 28 November 2016 by Kajenthini Siva (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அரச இரத்தினம்
Pages சின்னப்பு
Birth 1922.06.10
Place சங்குவேலி
Category கலைஞர்

அரச இரத்தினம், சின்னப்பு (1922.06.10 - ) யாழ்ப்பாணம், சங்குவேலியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னப்பு. இவர் மரவேலை, சிற்பம், இலக்கியம், சித்திரம், நாடகம், கவிதை, நாடக இயக்குனர் ஆகிய துறைகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவரால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழன் கதை என்னும் வரலாற்று நாடகம் மேடையேற்றப்பட்டதுடன் நான்காவது தமிழாராய்ச்சி மாநாட்டில் 'உண்மை சுடும்' நாடகத்தை மேடையேற்றி நடித்துள்ளார்.

இவரது சேவையைப் பாராட்டி 2003 ஆம் ஆண்டில் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 124