ஆளுமை:அமதுர் றஹீம், துவான் தர்மா கிச்சிலான்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அமதுர் றஹீம்
தந்தை துவான் தர்மா கிச்சிலான்
தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ
பிறப்பு 1945.01.15
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அமதுர் றஹீம் (1945.01.15 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர்; கலைஞர். இவரது தந்தை துவான் தர்மா கிச்சிலான்; தாய் ஸ்ரோதிடிவங்சோ அஜ்மஈன் அப்பாய் ரெலியாபீபீ. 1963 ஆம் ஆண்டில் ஆசிரியையான இவர் 1990 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார். ஆசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் உப அதிபராகவும், உடற்கல்விப் போதனாசிரியராகவும், உடற்கல்விப் பரிசோதகராகவும், ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகராகவும், 1978 முதல் 1990 வரை முதன்மை மொழி தமிழ் ஆசிரிய ஆலோசகராகவும், மதிப்பீட்டு பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

1958 ஆம் ஆண்டில் இவர் பள்ளி மாணவியாக இருக்கும் போது 'வெளிச்சம்' எனும் தலைப்பில் இவரது முதல் கவிதை கல்லூரி சஞ்சிகையில் இடம்பெற்றது. தொடர்ந்து இருபத்து மூன்று சிறுகதைகளையும், இருநூறுக்கும் மேற்பட்ட கவிதைகளையும், முன்னூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்கள், வானொலிப் பிரதியாக்கங்கள், கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரது முதல் வானொலி ஆக்கம் 1975இல் 'சமூகத்தில் முஸ்லிம் பெண்களின் பங்கு' எனும் தலைப்பில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. இவரது கவிக்குழந்தை எனும் கவிதைத்தொகுதி வெளியாகியுள்ளது.

2009ஆம் ஆண்டில் இலங்கை அரசினால் வழங்கப்படும் கலாபூஷணம் விருதையும் இவர் பெற்றுள்ளார்.


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 1858 பக்கங்கள் 35-41