ஆளுமை:அப்ரா, இல்யாஸ்

From நூலகம்
Name அப்ரா இல்யாஸ்
Pages முஹம்மது இல்யாஸ்
Pages நூருல் ஹம்சியா
Birth
Place கம்பளை
Category எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்ரா, இல்யாஸ் கம்பளையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை முஹம்மது இல்யாஸ்; தாய் நூருல் ஹம்சியா. ஆரம்பக் கல்வியை கம்பளை ஸாஹிரா தேசிய கல்லூரியிலும் உயர் கல்வியை மாவனல்லை பதுரியா மத்திய கல்லூரியிலும் கற்றார். தற்பொழுது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியக் கற்கைகள் பொதுத்துறையில் கல்வி கற்கின்றார். இவர் கவிதை, சிறுகதை எழுதும் திறமை கொண்டவர். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறையில் பிரவேசித்துள்ளார் அப்ரா. சிறகடிக்கும் நிலவு எனும் கவிதைத் தொகுதியை 2018ஆம ஆண்டு தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தில் இயங்கும் சமூகவியல் ஆய்வுகளுக்கான மாணவர் ஆய்வு மன்றத்தினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இந்நூல் சமூக, அரசியல், கல்வி, கலாசாரம் மற்றும் தனி மனித உணர்வு பிரச்சினைகளைப் பேசுகிறதென்கிறார் எழுத்தாளர். மாவனல்லை மண்ணுக்கே உரிய சொற்பிரயோகங்கள், சொற்றொடர்களைக் கோர்த்து இவர் சிறுகதைகளை புனைந்துள்ளார். சமூக சிந்தனை, மூட நம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் பண்பும் நகைச்சுவை கலந்த பாணியில் இவரது சிறுகதைகள் அமைந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார் எழுத்தாளர். இவரது கவிதை மற்றும் சிறுகதைகள் விடிவெள்ளி, நவமணி, முஸ்லிம் முரசு போன்ற பத்திரிகைகளிலும் அல்-இஸ்லாஹ், தாய்வீடு, வியூகம், சாளரம் போன்ற சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளள. தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபுமொழிப் பீடத்தின் மாணவர் ஆய்வு மன்றத்தின் கீழ் இயங்கும் சாளரம் சுவர் சஞ்சிகை கல்வியாண்டு 2016/2017 இற்கு இவரே ஆசியருமாவார். ஆய்வுத் துறையில் ஆர்வம் உள்ள இவர் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இவரின் எழுத்துத் துறைக்கு பெரிதும் உதவுவது இவரின் கணவரான ஊடகடவியலாளர் ஆதில் அலி சப்ரி என்பதையும் நினைவுகூருகிறார்.


குறிப்பு : மேற்படி பதிவு அப்ரா, இல்யாஸ் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • சிறகடிக்கும் நிலவு (கவிதைத் தொகுதி)