ஆளுமை:அன்னலட்சுமி, இராசதுரை

From நூலகம்
Revision as of 01:10, 4 July 2019 by Meuriy (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Name அன்னலட்சுமி, இராசதுரை
Birth
Place திருநெல்வேலி
Category எழுத்தாளர்

அன்னலட்சுமி, இராசதுரை யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர், பத்திரிகையாளர். கல்வியங்காடு செங்குந்தா இந்துக் கல்லூரியிலும் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியிலும் கல்விகற்றார்.

'யாழ் நங்கை' என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கிய இவர், 1962 ஆம் ஆண்டு வீரகேசரியில் உதவி ஆசிரியராக இணைந்து செய்திகளோடு 'மாணவர் கேசரி' பக்கத்துக்கும் பங்களித்தாட். 1966 இல் வீரகேசரி நிறுவனம் வெளியிட்ட 'ஜோதி' என்னும் குடும்ப வார இதழின் பொறுப்பாசிரியராகவும் 1969 ஆம் ஆண்டு முதல் வீரகேசரி நாளிதழின் கட்டுரைப் பகுதிக்குப் பொறுப்பாகவும் 1973 முதல் 1984 மித்திரன் வார மலர் பத்திரிகையின் பொறுப்பாசிரியராகவும் பணியாற்றினார். 2010 முதல் கலைக்கேசரி மாத இதழ் ஆசிரியராக உள்ளார்.

விழிச்சுடர் (குறுநாவல்), உள்ளத்தின் கதவுகள் (புதினம்), நெருப்பு வெளிச்சம் (சிறுகதைத் தொகுப்பு), இருபக்கங்கள் (கவிதைத் தொகுப்பு), நினைவுப் பெருவெளி போன்றவை இவரது நூல்கள். இவரது பத்திரிகைப் பணியைப் பாராட்டி இந்து கலாச்சார அமைச்சு 1992 ஆம் ஆண்டு 'தமிழ்மணி' விருது வழங்கிக் கௌரவித்தது. எட்மண்ட் விக்கிரமசிங்க அறக்கட்டளை வழங்கிய சிறந்த பத்திரிகையாளருக்கான விருதை 1993 இல் பெற்றார்.


வெளி இணைப்புக்கள்

Resources

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 59
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 99-102
  • நூலக எண்: 406 பக்கங்கள் 04-05
  • நூலக எண்: 10174 பக்கங்கள் 30
  • நூலக எண்: 14527 பக்கங்கள் 15-17