ஆளுமை:அனந்தராசன், மாணிக்கம்

From நூலகம்
Name அனந்தராசன்
Pages மாணிக்கம்
Birth 1948.12.27
Place அல்வாய்
Category கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அனந்தராசன், மாணிக்கம் (1948.12.27 - ) யாழ்ப்பாணம், அல்வாயைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை மாணிக்கம். இவர் தனது எட்டாவது வயதிலிருந்து மு. பொன்னையாவிடம் கலை பயின்றார். கவிஞர் நாடக மன்றத் தலைவராகவும் பிரதேச கலாச்சாரப் பேரவை, மாவட்டக் கலாச்சாரப் பேரவை ஆகியவற்றின் நிர்வாக உறுப்பினராகவும் கடமையாற்றியுள்ளார்.

அரிச்சந்திர மயான காண்டம், காத்தவராயன், சத்தியவான் சாவித்திரி, ஶ்ரீவள்ளி, வாலி கதை, பூதத்தம்பி, பவளக்கொடி, பக்த மார்க்கண்டேயர், பாஞ்சாலி சபதம், தங்கைக்காக, சட்டத்தின் நிழல், தூரம் அதிகமில்லை உள்ளிட்ட பல நாடகங்களை மேடையேற்றி நடித்து வந்துள்ளார். இவரது நடிப்புத் திறமைக்காகக் கரவெட்டி பிரதேச சபை, வடமராட்சி தெற்கு- மேற்கு பிரதேச கலாச்சாரப் பேரவை என்பவற்றால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

Resources

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 123
  • நூலக எண்: 1034 பக்கங்கள் 21-23