வலைவாசல்:மூன்றாவது மனிதன்

From நூலகம்


மூன்றாவது மனிதன்

மூன்றாவது மனிதன் இதழானது ஈழத்தில் தொண்ணூறுகளில் வெளிவந்த மிக முக்கியமான சிற்றிதழ்களில் ஒன்றாகும். இதழின் ஆசிரியர் எம். பௌசர். இதழின் வெளியீடு 1996ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இரு மாத இதழாக வெளிவந்தது. மனிதநேயம் மிக்க படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களின் தளமாக அமைந்திருந்தது.

நூலகத்தில் மூன்றாவது மனிதன்

நூலக நிறுவனம் மூன்றாவது மனிதன் இதழின் வெளியீடுகளை மின்வடிவாக்கிப் பாதுகாப்பதோடு தடையற்று அவற்றை எங்கிருந்து எவரும் படிப்பதற்கும் பகிர்வதற்கும் எளிதான வகையில் எண்ணிம நூலகத்தில் வைத்திருக்கிறது.

மூன்றாவது மனிதன் ஆசிரியர்

எம். பௌசர்.jpg

"எம். பௌசர்" ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த இவர் மூன்றாவது மனிதனின் ஆசிரியராகவே இலக்கிய உலகில் பரவலாக அறிமுகம் பெற்றுள்ளார். ஈழத்து இலக்கிய வரலாற்றில் மூன்றாவது மனிதன் இதழானது காத்திரமான பங்களிப்பை கொண்டிருக்கிறது. கடுமையான யுத்த சூழல் தரும் பல்வேறு இம்சைகளுக்கு மத்தியிலும் மூன்றாவது மனிதன் இதழை வாழ வைத்த பெருமை இதழாசிரியர் எம்.பெளசர் அவர்களை சாரும்.

1990களின் ஆரம்பத்தில் 'தடம்' எனும் இலக்கிய சஞ்சிகையை நடத்தியவர். முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையின் ஆசிரியரும் இவரே. மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் மூலம் பல தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். ஒரு படைப்பாளியாக, விமர்சகனாக, வெளியீட்டாளனாக, அரசியல் அவதானியாக பல் பரிமாணங்களை கொண்டவராக விளங்குவதோடு மூதூர் மிஸ்லீம் மக்களின் வெளியேற்றம் குறித்த அவலங்களை ஒளிப்படங்களாக ஆவணமாக்கியுள்ளார். மூன்றாவது மனிதன் இதழில் இடம்பெற்ற குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார்.

மலர்

942.JPG

மூன்றாவது மனிதன் முதலாவது இதழின் முகப்பு

வலைவாசல்களின் தொகுப்பு: நூலகம் வலைவாசல்கள்

Purge server cache

Information Resource Type : Books [8,910] Magazines [11,617] Newspapers [44,652] pamphlet [1,033] நினைவு மலர்கள் [864] சிறப்பு மலர்கள் [3,358]

Categories : Authors [3,691] Publishers [3,095] Year of Publication [138]

Reference Resources : Organizations [1,700] Biographies [2,745]

Information Access Entry Points : Project Noolaham [70,434] Key Words [89] Portals [25]

Special Collections : Muslim Archive [222] Upcountry Archive [135] Women Archive [5] Manuscripts [24]

Sister Projects : பல்லூடக ஆவணகம் - Multimedia Archive