பகுப்பு:அம்பு

From நூலகம்

'அம்பு' இதழ் 1970களில் ஈழத்தில் வெளிவந்த மாதாந்த அறிவியல் சிற்றிதழ். இதழின் வெளியீடு 1973ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. கொழும்பு விஞ்ஞான எழுத்தாளர் கழகம் சார்பாக கல்முனை சாஹிரா கல்லூரி, தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி ஆகியவற்றின் விஞ்ஞான கழகங்களின் உதவியோடு திரு.சின்னையா கதிர்காமநாதன் அவர்களை ஆசிரியராகவும், ஏ.எச்.அப்துல் பஸீர் அவர்களை துணை ஆசிரியராகவும் கொண்டு உள்ளடக்கத்தில் விஞ்ஞான அறிவியல் சார் கட்டுரைகளையும் துணுக்குகளையும் தாங்கி வெளிவந்தது.